பிராணாயாம மண்டலங்கள்

ரிஷிகள் கூறியுள்ளபடி யோக உண்மைகள் என்பது தத்துவங்களில் இருப்பதால் அதனைப் பலவாறாய் விளக்கப்படுவதாலும் அது பற்றி பயிற்சியற்றவர்களுக்கு தெளிவற்றிருப்பது போலத் தோன்றிடினும் நற்பயிற்சியின் மூலம் வெற்றிகிட்டும் காலத்தில் மேற்கூறிய தத்துவ விளக்கங்கள் பற்றி பல உண்மைகள் தெள்ளத் தெளிவாய் புலப்பட்டு விடும். துவக்க காலத்தில் சிலருக்கு மிகக் குறைந்த அளவே விளங்குவதால் அவர்கள் யோகத்தை, பிராணயாமத்தை முழுதும் ஒப்புக்கொள்ள மறுப்பதோடு சலிப்பு காரணமாக தொடர்வதும் இல்லை. தீவிர பயிற்சியும் நம்பிக்கையும் கொண்டவர்களால் மட்டுமே குறித்த இலக்கை அடையமுடியும்.
ரத்தம் , தசை , நரம்பு, சதை மற்றும் எலும்புகளால் ஆன தூல உடலில் சூக்கும வடிவாய் (அரூப வடிவில்) ஆறு சக்கரங்கள் இடம் பெற்றுள்ளதை ஏற்கனவே பார்த்தோம். இவை யாவும் முதுகந்தண்டின் கீழிருந்து மேலாக அமைந்துள்ளது. மூலாதாரம் துவங்கி ஆக்ஞை வரை ஆறாதாரத் தளங்களாய் அந்நெடு ந்தண்டில் வாசல்கள் அமைத்துக் கொண்டு அதனதன் வழியே ஆற்றல்களை வெளிப்படுத்தி விருத்தி செய்கின்றன குதம், குய்யம், (எருவாய், கருவாய்) என்ற இரண்டினூடே (நடுவே) பிரகாசித்து அதன் பரவலை விரிக்குமிடம் மூலாதாரம்.
சுவாசத்தின் (பிராணனின்) இருப்பிடமான குறி (கருவாய் )பிரதேசம் ஸ்வாதிட்டானம் (சுவாசம் + அதிட்டானம்) பெயருடன் வெளிப்படுகின்றது.
தொப்பூழ் எனப்படும் நாபித்தளம் மகார அட்சரமான “ம்” என்ற ஒலியேற்றப் பெருந்தளமான “மணிபூரகம்” சக்கர வியாபகப் பிரதேசமாகும்
ஓங்கார என்ற நாத (சப்தம்) அதிர்வு ஒலியை மேற்கொண்டு இதய பாகத்தில் இருந்து (அனாஹதமாய்) எப்போதும் எழுப்பியவாறு இயங்கி வரும் தளமே அனாஹதம் ஆகும்.
ஆகாய தத்துவமாயும் , ஆகாயத்தளமாயும் ஆகாச பீஜமுமான “ஹம்” மந்திர வடிவாய் இயங்கி வளரும் விசுத்தம் என்றாகிய (மார்புக்கு மேலும், தலைக்கு கீழும்) அமைந்துள்ள கண்டம் எனும் கழுத்துப் பகுதியே “விசுத்தி” சக்கர தளமாகும்.
கண்நுதல் எனப்படும் நெற்றியின் நடுக்கீழும், இரு கண்களின் மேல் புருவ நடுப் பாகத்தும் விளங்கும் அவ்விடமே மனதின் உள்முகம் காணும் பிரதேசம் எனவும்
அகக் கண்களின் ஒளி மண்டலப் பகுதி எனவும் பெரு ஞானப் பிரவாக அறிவிப்புக்களமான “ஆக்ஞை” என்ற பேருண்மைத் தளச் சக்கரமாகும்
மேற்கூறிய அத்தனை சக்கர சக்திகளை ஒவ்வொன்றாகவும் , ஒரு சேரவும், அதனதன், ஆற்றல்களைத் தூண்டி எழுப்பிவிடவும் இயக்கவும் ஞான வீட்டின் திறவுகோலான இருகாலாகிய சுவாச நெறி என்ற பிராணாயாமம் ஆகும். பிராணாயமத்தின் உருவம் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் 16 ஆகும்.
1 ) அண்ட பிண்ட மண்டலம்
2 ) பிராண மண்டலம்
3 ) முக மண்டலம்
4 ) சுவாச கோச மண்டலம்( சுவாச, நிசுவாச, )சுவாசபேதம்
5 ) ரத்த மண்டலம்
6 ) நாடி மண்டலம்
7 ) சக்கர மண்டலம்
8 ) அஸ்தி மண்டலம்
9 ) காலதேச மண்டலம்
10 ) கியாதி மண்டலம்
11 ) பரமாணு மண்டலம்
12 ) பிரக்ஞா மண்டலம்
13 ) அணு பிரக்ஞா மண்டலம்
14 ) சூட்சம பிராப்தி மண்டலம்
15 ) நாத , ரூப , காந்தி மண்டலம்
16 ) பரபிரம்ம மண்டலம்
உயிரின் ஆதாரம் எனப்படும் பிராண வாயு (உயிர்காற்று) வாசியினைக் கொண்டு இடகலை, பிங்கலை, (இடம், வலம்) என மாற்றி , ஏற்றி இறக்கும் பிராணாயமத்தின் பல்நிலை வித்தையின்செயல்பாடாகும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
திருமூலர்
உள்ளிழுத்து , உள்ளடக்கி, வெளிவிட்டு, வெளித்தங்கி விளையாடும் விளையாட்டே சித்தர்களின் தலையாய பணியும் பொழுதுபோக்கும் ஆகும் . பூரக , ரேசக, கும்பக , தம்பன என்ற நால்வழி சுவாசப்பணிகள் முறையே
மூச்சை உள்ளிழுத்தல்,
மூச்சை உள் நிறுத்தல்,
மூச்சைவெளிவிடல்,
மீண்டும் மூச்சிழுக்கக் காத்திருத்தல்
எனவாறு இவைகளை கால நிர்ணயத்தின் படி, (மாத்திரை), செயல்படுத்துவதோடு தொடர்ந்த பயிற்சி செய்தல் மற்றும் ஒவ்வொரு சுவாச செயல்களின் மூலம்
மனத் தொடுகை (மனத்தொடர்பு) நாதம், மந்திரம் என்ற (ஒலித்தொடர்பு)
தேஜஸ், பிரபை என்ற (ஒளித்தொடர்பு) தேசம் என்ற சுவாசப் பரவலின் நிற்கும் தூரம்
(வெளி நீள் தொடர்பு) எனவாறு பல்வகைப் பாடத் திட்டங்களை சித்தர்கள் உபதேசித்துள்ளனர் .
மனித உடலில் சங்கமித்த ஆன்மாவுடன் உறவு கொண்ட உயிரை (சீவனை) அண்டத்துடன் இணைக்கவும் அவ்விணைப்பின் நுட்பமிகு கருவிகளாகவும் , களங்களாகவும் ,விளங்குபவையே, முன் சொன்ன 16 மண்டலங்கள் ஆகும். யாதொரு சுவாசப் பயன்பாட்டினையும் பிராணமயமாக்கல் , வெவ்வேறு வித ஆற்றல்மிகு பலன்களைத் தருகின்றது புதிர்மிக்க இந்த கலையினை ஆயுட்காலம் முழுதும் கற்றுக் கொண்டே இருக்கலாம் மனித பூரண ஆயுட்காலம் 120 வாழ்வாண்டு என்பர் .
இக்காலவரை இக்கலைக்கு ஒரு பொருட்டே அல்ல
பொதுவாக சராசரி மனித ஆயுட்காலம் போதாதேன்பதே உண்மை. இதன் அடிப்படையில் இக்கலையினாலே ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் இயலும் என இருடிகள்(ரிஷிகள்) கூறியுள்ளனர்.
பிராணாயாமத் துணை கொண்டு உள நோய் தீர்ந்து பெரு மகிழ்வெய்தி பேருணர்வாற்றல் பெறலாம் தீரா உடல் நோய் எதுவாக இருப்பினும்கொடிய மரபு வழி நோயாயினும் வல்வினை நோயாயினும் தீர்ப்பதற்கோர் அருமருந்தென பிராணாயாமத்தை அடையாளம் காட்டியுள்ளன. இன்றும் பிறவி நோய்க்கும் கூட அஃது தொடராதிருக்கவும் இக்கலையின் மூலமே நிவாரணம் பெறலாம் என மகான்கள் இயம்பியுள்ளனர்.
மானுடர்தம் துன்பம் , நிறைவின்மை, நிலையாமை, போன்ற முக்குறைகள் நிறைந்த லோகாதயமான இப்புவிவாழ்வின் இயல்பதனை உணர்ந்து அதனின்றும் முற்றிலும் விடுபட்டு இன்பம், நிறைவு , நிலைப்பு போன்ற பூரண அனுபவங்களைப் பெற சித்தர்கள் கூறும் மெய்ஞான வழி போந்து. சர சாஸ்த்திரத்தின் மூலம் யோக சாஸ்த்திர பெரு வீட்டின் படிகளாகிய இயம , நியம, ஆசன, பிராணாயாம , பிரத்யஹார, தாரணை , தியானம் , சமாதி என்ற இறை மாளிகை அடையும் விரிவாக்கப் பயிற்சியினை இந்த உலகிற்கு அளித்த சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திருப்பாதம் பணிந்தேற்றிப் பிராணாயாமந்தனை பயிலத்துவங்குவோமாக.
வேதசாரம் எனக் கூறப்படும் பல்வேறு உபநிஷத்துக்களுள் ஒன்றான
பிரச்னோபநிஷத்தில் பிப்பலாத முனிவர் கூறிய பிராண அபானனைப் பற்றிய உபதேசத்தைப் பார்ப்போம்.
யதுச் சுவாஸ - நிச் ஸ்வாசா
வேதா- வாஹீதி ஸமம் நயதீ தி ஸ ஸமான்:!
மனோ -ஹ வாவ யஜ மான:
இஷ்ட பல -மேவோ தான ஸ ஏ ந ம் யஜமானம்
அஹர ஹர் - ப் ர ஹ் ம கமயதி.
பிராணனே சகல உயிர்களுக்கும் பேசாத மந்திரமாக விளங்கி வருகிறது.
இது தொடர்பாக நாம் பிராணாயாம முறைகளை பல தலைப்புகளில் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து வந்திருக்கிறோம். சுவாச சித்தி பெறுவதற்கு நாடி சுத்தி என்ற இடம், வலம் , மற்றும் வலம், இடம் என மாறி மாறி சுவாசங்களை இயக்கி வருகிறோம்
பிராணாயாமம் பழகுவதற்கு முதலில் ஒரு அறையினை அதற்கென தேர்வு செய்து கொள்வோம். .
அந்த அறை வடக்கு, வடகிழக்கு திசையில் அமைந்திருப்பின் மிக ஏற்றதாகும்
மேலும் அந்த அறையினுள் உறங்குவதோ, வேறு குடும்ப ,குடும்பமல்லாதவர்களுடைய எந்த ஒரு ஆலோசனை செயல்பாடுகள் தீர்மானித்தல் போன்ற காரியங்களை செய்யாதிருத்தல் வேண்டும்.
அந்த அறையினுள் நல்ல சூழலை ஏற்படுத்தும் வகையில் நாம் விரும்பி வணங்கும் தெய்வங்களின் படங்கள், மகான்களின் படங்கள், முதலியவற்றை வைத்து மணமுள்ள மலர்களாலும், தூப, தீப வழிபாடுகள் செய்வதற்கும் தகுந்த நிலையினை ஏற்படுத்துவது.
அங்கு செல்லும்போது நம் மனத்தை ஆசைகள், வெறுப்புகள் போன்ற எண்ண ஓட்டங்களை முழுதும் தவிர்த்து அன்பு, கருணை போன்ற நற்குண இயல்புகளை மேலோங்க செய்வது. அந்த அறையின் புனித தன்மையினை மேலும் வளப்படுத்தும்.
இது போன்ற ஒத்த மனம் அல்லாதவர்களை அந்த அறையினுள் பிரவேசிக்க அனுமதிக்க கூடாது.
அமரும் ஆசனம் , அமரும் இடம், பயிற்சி நேரம் இவைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் ஒரே நிலையில் இருத்தல் அவசியம்.
சுருங்ககூறின் இது போன்ற சூழலை ஏற்படுத்த அமைந்ததே ஆலயங்களும் , சத் சபைகளும் அக்காலத்தில் நிறுவப்பட்டிருந்தன.
இன்றைய கால கட்டத்தில் மேற்குறித்த சூழலை கோவில்களில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
தியான அறையில் நாம் புகும்போதும், வெளியேறும்போதும் சலனமற்ற மனதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். கலக்கமோ எப்போதாகினும் எதிர்பாராத , துன்பமோ ஏற்படுகையில் அந்த அறையினுள் நிலைப் படுத்தப்பட்டிருக்கும் தூய அதிர்வுகள் மனதை சரிப்படுத்தி அமைதியுறச் செய்யும். இதை நாம் நிரூபணமாக உணர முடியும்
மனம் ஒழுங்கு பெற மனதின் நுண்ணிய பார்வையால் ஆன்மாவை காண மூச்சினால் முடியும்
பிராணாயாமம் என்பது சுவாசத்தின் இயக்கம் மட்டுமே என்று நினைப்பது தவறாகும்.
பிராணாயாமத்திற்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்றாலும் அது மிக குறைந்த அளவே. பிராணாயாமம் வெற்றி அடைய பல உத்திகளில் சுவாசமும் ஒன்று.
சுவாசத்தினை கட்டுபடுத்துதல் பிராணாயாமம் என்பதை விட நுரையீரல்களில் இயக்கத்தை கட்டுபடுத்துவதே பிராணாயாமம் எனலாம்.
நாம் விடும் மூச்சு நுரையீரலின் இயக்கத்தை உண்டாக்கவில்லை . மாறாக நுரையீரல்களின் இயக்கமே மூச்சை உண்டு பண்ணுகிறது
நுரையீரலை பிராணனே இயக்குகிறது. பிராணன் நுரையீரலை செயல்படுத்தும்போது பிராணக் காற்று உள்ளிழுக்கபடுவதும் வெளிவிடுவதும் நடைபெறுகின்றது .
நுரையீரல் என்ற கருவியினை இயக்கும் தசை, நரம்பு , ஆகியவைகளை நாம் கட்டுபடுத்த முடியுமானால் அதுவே நாம் பிராணனைக் கட்டுபடுத்துதலும் பிராணயாமம் செய்தலும் ஆகும்.
பிராணனும், பிராணக் காற்றும் ஒன்றை ஒன்று தழுவியவையே . இதில் இருந்தே இரண்டும் வெவ்வேறானது என அறியலாம்
மூச்சு இன்றி உயிர்) நிலைக்காது என்றால் யோகிகள் மூச்சு விடாமல் பல காலம் வாழ்ந்தும், தன் உடலை முழுதும் நீருக்குள்ளே, மண்ணுக்குள்ளோ , புதைத்துக் கொண்டு மூச்சற்று இருந்த போது உயிரோடு இருந்திருக்கிறார்கள் , எனின் பிராணனும் மூச்சும் வெவ்வேறானது என்பது உறுதியாகிறது
பிராணாயாமம் என்பது பின் எதுவாக இருக்க முடியும் ? பின் எதற்காக அதை செய்தல் வேண்டும் யோகத்திற்கு அது எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பின்னும் பார்ப்போம்.
நரம்புகளில் செல்லும் சக்தி பெருக்கினை புதுப்பாதையில் செலுத்த முயற்சி செய்வதும் பிராணாயாம உத்தி ஆகும்.
அவற்றை நரம்புகளில் பயணிக்கும் சக்திகள் எவ்விதமாக இயக்கமுறுகிறது எவ்விதமாக நாம் உணர்வது என்பதைத் துல்லியமாக கணிப்பதும் அவ்வாற்றலை ஒரு நிலைநோக்கோடு (Concentration) எவ்வாறு நம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது என்பது யோக பயிற்சியில் கண்டுகொள்ளக்கூடிய உண்மையாகும்.
அவ்விதமே நம் கட்டுபாட்டிற்குள் வசமாகிய நரம்பு உணர்வு சக்திகளை நமது உடலிலும் , உடலின் வெளியிலும் நாம் விரும்பியபடி செலுத்தும் முறை யோகத்தின் பிரதான அங்கமாகும்
மேற்கூறிய நரம்புகளின் வழியே பயணிக்கும் வழித் தடத்தினை (ராஜ பாட்டை) நீண்ட முதுகந்தண்டின் மையத் துளையே என ரிஷிகள் கண்டு போதிக்கின்றனர். அத்துளையின் மூலம் சுவாச நிசுவாசத்தின் மூலம் தூண்டப் பெற்ற சுழுமுனை நாடி மூலம் அபூர்வ சக்தி உடலிலும் , மனத்திலும் உடல் உணர்வை தாண்டிய “வெளி “ என்ற ஆகாசத்தையும் தொடர்புபடுத்தும் சக்தி மையங்களே ஆதாரங்கள் என்ற மடை வாசல்களாலும் ஆறு ஆதார மையங்களில் உணர்வினை கலப்பதும் அவ்விடங்களில் நின்றும் அங்கிருந்தபடி அண்டம், பிண்டம் (உடல், உலகு) இரண்டும் நம்மை தோற்றுவித்து தொடர்புறச் செய்யும் தந்திரமே யோகக் கலை.
மந்திரம் , தந்திரம் , எந்திரம் என முறையே மனதின் உள்ளாக பிராணனில் கலந்த ஆதார சக்கரங்களை சங்கமித்த ஊடகம் வாசிக்கலை.
இத்திறவுகோல் மூலம் இருவித இயக்கங்களை திறந்து பார்க்கவியலும் பௌதீக இயக்கம், பிராண இயக்கம் என இவ்விரண்டுமே “பிரபஞ்ச தோற்றுவாய்” ஆகும்.
பௌதீக இயக்கம் என்பது ஆகாசம், உருவாவதற்கு காரணியான, அணுக்கள் இயக்கமற்று, (சலனமற்று) நிர்ச்சலன அமைதியாக இருந்த போது, பௌதீக நிலையாகும்.
பிராண இயக்கம் என்பது நிர்ச்சலனமாய் இருந்த (ஒடுக்கத்தில் இருந்த) அணுப்பரிமாண உயிர் இயக்கங்களை மீண்டும் சலனப் படுத்தி உருவமற்று இருந்த பரமாணுக்களை கூட்டி பொருள் வடிவாய் ஆக்கியதும் பிராண இயக்கமே.
இவ்வாறு யாவற்றிலும் நீக்க மாற நிலைத்திலங்கும் பிராணனை (பிராண சக்தியினை) நாம் அறிந்துணர்ந்து அதன் வழி கலப்பது பிராணாயாம நெறி ஆகும்

No comments:
Post a Comment