Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Monday, November 7, 2011

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?



நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

எண்ணங்கள்



மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)
2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை. இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களினதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.

1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).

2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.

3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.
இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.

பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம். 1. உணர்வு உந்தும் இயல்பு (id) 2. நான் என்னும் முனைப்பு (Ego) 3. அதியுயர் மனக் கூறு (Super Ego)

1. உணர்வு உந்தும் இயல்பு (id)

இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன. ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் 'உணவினையும்') வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்புடன்' (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.

2. நான் என்னும் முனைப்பு (Ego)

உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.

3. 'அதியுயர் மனக் கூறு' (Super Ego)

உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது 'நான் என்னும் முனைப்'பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் 'அதியுயர் மனக்கூற்றின்' (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்'வதியுயர் மனக்கூறான'து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.

மனித ஆளுமை....

ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.

இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை 'மனச் சக்தி ' என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார். அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும். ம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும்

Sunday, November 6, 2011

சிந்தனை

சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.


சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

சிந்தனை செய் மனமே


சிந்தனை ஒரு வரம். அடிக்க அடிக்க அம்மி நகரும், தட்டத் தட்டச் சிலை வடிவம் பெரும். அதே போல் சிந்தனையால் உங்கள் மூளையைக் குடையக் குடைய அறிவு வளரும், ஞானம் பிறக்கும். தினம் ஒரு 15 முதல் 30 நிமிடம் நாம் சிந்திப்பதற்காக ஒதுக்கினால், நம் ஞானம் விருத்தியாகும். மூளையை உபயோகிக்காமல் விடும் பொழுதுதான், மறதி பெருகுகிறது. ஆய்வுகள் சொல்கின்றன, நாம் நம் மூளையின் திறனில் வெறும் 10 விழுக்காடு தான் பயன்படுத்துகிறோமாம். மிச்சம்.... சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.

வேலைகளுக்கு நடுவே நாம் ஏதாவது எண்ணிக்கொண்டேதான் இருப்போம். அவை எண்ணங்கள். நான் சொல்வது, ஓய்வாக அமர்ந்து நமக்கு நாமேமனத்துக்குள் விவாதம் நடத்துவது; 'சிந்தனை'. எதைப் பற்றியாவது கேள்வி கேட்டு, உங்கள் மூளையைக் குடையுங்கள். நீங்களே வியக்கும் வண்ணம், பல புதிய விஷயங்கள், சிந்தனைகள் உங்கள் கபாலத்தை நிரப்பும். ஏதோ ஓர் அலைவரிசை உங்களுக்குள் புதிதாய் பிறக்கும்.

சிந்தித்ததால் அசோகன் மனிதம் காத்தான், சித்தார்த்தன் புத்தன் ஆனான். சிந்தித்ததால் யானை முகன் ஞானப் பழம் வென்றான். சிந்தனை ஞானம் கொடுக்கும் சரி... அதை வைத்துக்கொண்டு 'புளியங்காய்' கூட வாங்க இயலாது... ஆமாம்! ஆமாம்.... வாங்க முடியாது.... உற்பத்தி செய்யலாம்...! சிந்தனை வேறு என்ன தரும்? அது உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். வழக்கமான முறையில் அல்லாமல், புதிய வழியில் செயலாற்றி, மற்றவரை வியப்பில் ஆழ்த்துவீர்.

ஒரு துணுக்கு:

ஒரு அலுவலகத்தில் வேலைக்கான ஒரு நேர்காணலில், மேலாளர் கேட்கிறார் - "what is before you?"
ஒருவன் சொன்னான் - காபி
மற்றொருவன் சொன்னான் - காபி
மூன்றாமவன் சொன்னான் - டீ

எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் காபி தானே பரிமாரப்பட்டது. வியப்பாக, 'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். எப்படி?

ஆங்கில எழுத்து வரிசையான 'a,b,c,d' யில் 'U' விற்கு முன் 'T' தானே!!!!

இந்தச் சாதுர்யம், பக்குவம், யோசனையெல்லாம், நீங்கள் அன்றாடம் சிறந்த புத்தகங்களை, கருத்துகளை, நிகழ்வுகளை படித்துத் தெரிந்து, கேட்டு, பின்பு நன்கு ஆய்ந்து உங்கள் கபாலத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது தட்டித் திறந்துகொள்ளலாம்.

சிந்தனை நம்மை மனிதன் ஆக்குகிறது. செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவுகிறது, வெற்றிக்கு வழிவகுக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருங்கள். சதா சிந்தித்தால் பைத்தியமாகி விடுவோம் என்பார்கள். பரவாயில்லை என்கிறேன் நான். பித்தம், ஞானத்தின் உச்சம்.. அது ஒரு பரவச நிலை.. நான் முழுப் பைத்தியம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்..!

சுதந்திர சிந்தனை

சிந்தித்தல், யோசித்தல் போன்ற வார்த்தைகள் நம்மால் தினசரி பயன்படுத்தப்படுபவையே. நமது சிந்தனைகள் எப்படி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் தெரியுமா? (சிலரைத் தவிர) அதிகமானவர்கள் ஒரு சிறைக்குள் மட்டுமே சிந்திப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு விஷயம் குறித்து விவாதிக்க கூறினால் ஒவ்வொரு வரும் தனது கருத்துக்களைக் கூறுவார்கள். பெரும்பாலும் அவர்களது கருத்து, அவர்களின் சிந்தனைப் போக்கினை ஒட்டியே வந்து விழும்.
சிந்தித்தல் என்பது மனதின் கருவி எனக் கூறலாம். மனது எந்த கருத்தையும் தனது போக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளும் இயல்புடையது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைப் பார்த்து அதில் உங்களுக்கு என்னென்ன தோன்றுகிறது என்பதை ஒரு பட்டியல் எழுதிக்கொள்ளுங்கள்.
இப்படத்தினை உங்கள் நண்பரிடமோ (அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்) காண்பித்து அவர்களுக்கு படத்தினைப் பார்த்தால் என்னத் தோன்றுகிறது என்பதைக் கேளுங்கள். அவர்களும் சில பொருள்கள், விஷயங்களைக் கூறுவார்கள். அதை கவனித்தீர்களேயானால், அவைகள் அந்த நபர்கள் சம்பந்தபட்டவையாகவே இருக்கும். நீங்கள் எழுதிய பட்டியலுக்கும் அவர் கூறியதற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம்.
இந்த படத்தினை சில குழந்தைகளிடம் காட்டி அவர்களிடம் என்ன தெரிகிறது என்பதைக் கேட்டுப்பாருங்கள். குழந்தைகளின் பட்டியல்கள், பட்டாம்பூச்சி, மரம், பறவை, பூச்சிகள், மேகம், பட்டம் ன்உ அழகான ரசனைமிக்க, இயற்கை சார்ந்த விஷயங்களாக இருக்கும். குழந்தைகளுகு இவ்வாறு கருத்துகள் தோன்றக் காரணம் அவர்களின் சிந்தனை சுதந்திரமாக, ரசனை மிக்கதாக உள்ளது.
மாறாகப் பெரியவர்களின் சிந்தனைகள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற இயலாத காற்று போல இருப்பதால் கருத்துக்களும் அவ்வாறே அவர்கள் சம்பந்தப்பட்டவையாக மட்டுமே இருக்கிறது.

பிரபல உளவியல் பரிசோதனைகளும் இது போல உண்டு, அதை (Ink Plot Test) டெஸ்ட் என்பர். ஒரு முறை கவுன்சிலிங் வந்திருந்த இளைஞரிடம் இதைப் போன்ற படத்தினைக் காட்டியபோது அவர் கூறிய ஒரு விஷயம் லவ் பேர்ட்ஸ் போல தெரிகிறது என்று கூறினார். (அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதற்கான வயதில் இருந்தார்.). ஓர் குடும்பத் தலைவி இதை ஒரு குத்துவிளக்கு என்றும், ஆன்மிகவாதி ஒருவர் இது திரிசூலம் என்றும் குறிப்பிட்டார்கள். சபரிமலைக்கு போவாரிடம் காட்டினால் பதினெட்டு படிகள் தெரிகிறது என்று கூடக்கூறலாம்.
சரி, இது போன்ற சிறைக்கூடச்சிந்தனைகளிலிருந்து எவ்வாறு வெளியேறுவது?
சிந்தித்தல் என்பது கூட நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயமாகத்தான் சில உளவியளார்கள் கருதுகிறார்கள். ஆகவே ஒரு விஷயத்தை பலவாறு யோசிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பலவற்றைக் கூர்ந்து கவனித்தல், படித்தல், ஒரு நிகழ்வு நடந்து விட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திப்பதைப் போலவே, நடக்காவிட்டால் எப்படி இருக்கும், அந்த நிகழ்வு நல்லபடியே, சிறப்பாக நடந்தேற என்னென்ன செய்யலாம் என்பதை சிந்தித்தால் நீங்கள் சிந்தித்தலில் விடுதலை பெறத் துவங்கிவிட்டீர்கள் எனக் கூற இயலும்.

ஒரு விஷயத்தைக் குறித்த பலரிடம் கருத்துகளைக் கேட்டுப் பெறுதல், அவ்விஷயத்தில் எதிர்கால மாற்றம் எப்படி இருக்கும் போன்றவை சிந்தித்தலில் சிகரத்தை தொடவைக்கும்.

சிந்தித்து செயற்பட்டால் வாழ்க்கை பிரகாசிக்கும்


ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

ஒவ்வொரு நாளின் பணிகளை செய்து முடிக்கவே நேரமில்லை எனும்போது முந்தைய நாட்களின் பணிகளும் சேர்ந்து கொண்டால் எப்படிச் செய்ய முடியும்?

தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நமக்காக காத்திருக்கும் பணிகளை செய்வதற்கு தாமதமாகிக் கொண்டே போனால் இரண்டு இடத்திலும் உறவுகள் சீர் குலைந்து போகிறது.

என்னதான் சரியான காரணங்களை நாம் வைத்திருந்தாலும், எடுத்துக் கூறினாலும் அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறும் போது நம்மைச் சார்ந்தவர்கள் மற்றும் நாம் சார்ந்திருக்க வேண்டியவர்களால் நாம் குறைத்து மதிப்பிடப்படுகிறோம்.



ஒரு முறை நம்மீது விழப்படும் முத்திரையானது நாம் என்னதான் சரிப்படுத்திக் கொண்டாலும் அகலுவதில்லை. மற்றவர்கள் நினைவில் நம்மைப் பற்றிய நல்ல விடயங்கள் தங்குவதைக் காட்டிலும், குறைகள் தான் நிலையாய் தங்கி விடுகிறது.

நாம் அதிக பணிச்சுமையால்தான் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய முடியாமல் திணறுகிறோம் என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் அதற்கும் தீர்வு நம் வசமே இருக்கின்றது. பணிச் சுமையைக் குறைக்கவும் பளு தெரியாமல் பணியாற்றவும் வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

அதிக பணிச்சுமையானது அழுத்தத்திற்கு வழி வகுத்துவிடுகிறது. அழுத்தம் எனப்படும் இடர்பாடு அதிகமானால் அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடுகிறது.

வெளிப்படையான உண்மையென்ன வென்றால் அழுத்தத்திற்கு ஆளா கியிருப்போர், தான் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே அறிவதில்லை. அதனால்தான் தனக்கு உடல்நலம் கெட்டுள்ளது என்பதையும் உணருவதில்லை.


நம்முடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் உடனே நாம் அன்றைய தினமோ அல்லது முந்தைய தினமோ என்ன உணவு எடுத்துக் கொண்டோம்? மாசடைந்து குடிநீரை எடுத்துக் கொண்டோமா? அல்லது சுத்த மில்லாத வெளி உணவுகளை சாப்பிட்டோமா? என்றெல்லாம்தான் ஆராய்கிறோமோ தவிர அதீதமான பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு அதுதான் நோயை வரவழைத்துள்ளது என்பதை உணர மறுக்கிறோம்.

நாம் ஏன் அதிகமான பணிச்சுமைக்கு ஆளாகிறோம்?
அவரவர் சூழலுக்கு ஏற்றாற்போல் பல்வேறு காரணங்களை நாம் கூறலாம்.

ஆனால் பொதுவான, மிகப் பொருத்தமான காரணம் என்ன வென்றால் சிந்தித்து திட்டம் வகுத்து செயல்படாததுதான் என்பதை கண்டிப்பாக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.



ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஆழ்ந்த சிந்தனைக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
காலை விழித்தெழுந்து அரை மணிநேரம் கழிந்தபின் கண்களை மூடியபடி குறைந்தது இருபது நிமிடங்களாவது சிந்திப்பதை மட்டும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இது தியானத்திற்கோ, பிரார்த் தனைக்கோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் கண்கள்தான் முடியபடி இருக்க வேண்டுமேயன்றி நம்முடைய ஆழ்மனம் முற்றிலும் விழிப்பாய் இருந்து சிந்தித்தல் வேண்டும் சற்று விளக்கமாய் சொல்வதென்றால் மூளை க்கு வேலை கொடுக்க வேண்டும்.

எதைப்பற்றி சிந்திப்பது,

நம் முன் உள்ள போட்டிகளை சவால்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.
அவற்றை திறமையாய் எதிர் கொண்டு மேலேறுவது எப்படியென சிந்திக்கலாம்.
புதுமைகளை, புதியவைகளை அறிமுகப்படுத்துவது பற்றிச் சிந்திக்கலாம்.
இப்போதிருக்கும் வரையறைகளை தாண்டி விரிவாக்கம் செய்வது குறித்துச் சிந்திக்கலாம்.
நம்மை மேம்படுத்திக் கொள்வது நம்முடன் அல்லது நம்மிடம் பணியாற்றுவோரை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கலாம்.
குடும்பத்தினரின் நலன்கள் குறித்துச் சிந்திக்கலாம்.
நமக்கு முன் காத்திருக்கும் கடமைகளை வகைப்படுத்தி விரைந்து முடிப்பது தொடர்பாய் சிந்திக்கலாம்.
நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டுவரும் செயல்களை செய்வதற்கு கால வரையறை செய்வதைச் சிந்திக்கலாம்.
வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைச் சிந்திக்கலாம்.
எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
உடல்நலத்தைப் பரிசோதிப்பதற்கு நேரம் ஒதுக்கிச் செல்ல வேண்டு மென்பதைச் சிந்திக்கலாம்.
வீடுகட்டுதல், மறுசீரமைத்தல், தொழில் நிறுவனத்திற்குத் தேவைப் படும் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது பழுது பார்ப்பது பற்றிச் சிந்திக்கலாம்.
நம் வாழ்க்கைக்கான அர்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.
வாழ்ந்த நாட்கள் பாராட்டும்படி, பேசப்படும் படி அமைந்திருக்க வில்லையெனில் வாழ்கின்ற நாட்களையும், இனி வாழும் காலத்தையுமாவது அவ்வாறு மாற்றுவது குறித்துச் சிந்திக்கலாம்.
பரவலாய் சமுதாயத்தால் நாம் அடையாளம் காணப்படுவதற்கான வழிமுறைகளையும் செயல்பாடு களையும் சிந்திக்கலாம்.
நட்புவட்டத்தையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்வது குறித்துச் சிந்திக்கலாம்.
வந்திருக்கும் அழைப்புகளுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக செல்ல வேண்டிய நிகழ்வுகளை வகைப் படுத்துவதைச் சிந்திக்கலாம்.
அவரவர் சூழலுக்கு ஏற்றவாறு அன்றாடப் பொறுப்புகளை செம்மை யாய் நிறைவேற்றுவது பற்றிச் சிந்திக்கலாம்.

சரி, எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்திலா சிந்திக்க வேண்டும்?

அப்படிச் செய்ய வேண்டியதில்லை.
அது சாத்தியமுமில்லை.

ஒவ்வொரு நாளும் சிந்தனைக்கென நேரம் ஒதுக்கி சிந்திக்கத் தொடங் கினாலே தானாய் முன்னுரிமைப் படுத்தும் வழிகள் கிடைத்துவிடும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சிந்திப்பதை ஒரு நாளின் முதன் மைப்பணியாய் வைத்துக் கொள்வது தான்.

நம்மை ஒரு முகப்படுத்தி சிந்திக்க உட்காருவதே மிகப்பெரும் செயல்தான். ஏனெனில் ஒன்றைப்பற்றி சிந்திக்கும் போதே உடனே செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்து சிந்திப்பதிலிருந்தே கூட எழுந்துவிட நேரலாம்.

அவ்வாறு செய்வதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் மாற்றத்தை கொண்டுவருதல் வேண்டும்.

சிந்திப்பதற்கான நேரம் என்பது வெறும் அன்றையப் பணிகளுக்கானது மட்டுமல்ல என்பதில் தெளிவு இருத்தல் அவசியமாகும்.

சிந்திக்க நேரம் ஒதுக்குதலானது தலைமைப் பண்பின் வெற்றிபெறும் தந்திரங்களில் ஒன்றாகும்.

எங்களின் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளின் போது பங்கேற்பாளர்கள் அவர்களின் பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு மிகச் சலிப்பாய் எங்களிடம் பல்வேறு விஷயங்களைச் சொல் வதுண்டு.

“விழித்திருக்கும் நேரம் முழு வதையுமே பணிச்சுமை ஆக்கிரமித்துக் கொள்கிறது”

“எப்போதும் ஓட்டமும் நடை யுமுமாகவே உள்ளது வாழ்க்கை”

“எதற்காக ஓடுகிறோம் என்பதையே அனுபவிக்க முடியாமல் ஓட வேண்டி உள்ளது”

மேற்கண்டவை உள்ளிட்ட இன்னும் பல்வேறு விமசர்னங்களை வைப் பார்கள்.

இதற்கெல்லாம் தீர்வு பல் துலக்குவது, குளிப்பது எப்படி அன்றாடத்தின் அவசியப் பணிகளோ அதே போல் நேரம் ஒதுக்கிக் கொண்டு சிந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிந்தனை தெளிவை ஏற்படுத்துகிறது.
தெளிவுதான் வெற்றிக்கான பாதையை அமைக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்பது நம் பணிகளை வகைப்படுத்த உதவுகிறது எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதற்கு பதில்கள் கிடைக்கிறது. செயல்களில் நேர்த்தியை அமைத்துத் தருகிறது.

தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமும் சரியான முடிவெடுக்கும் திறனும் வசப்படுகிறது. நம் பணிச்சுமைகளை பளுவைக் குறைத்து சுலபமாக்கி விடுகிறது.

சிந்தித்துச் செயற்பட்டால் சுடர்விட்டு பிரகாசிப்போம்..


எண்ணம் மனத்தின் கருவி


விலங்கு உடலாலும், உணர்வாலும் வாழ்கிறது. மனிதனுக்கு மனம் உண்டு. ஆனால் அவன் வாழ்வில் மனம் பெரும்பங்கு கொள்ளவில்லை. விலங்குக்குச் சிந்தனையில்லை, மனிதனுக்குச் சிந்தனையுண்டு, சிந்திக்கும் திறனிருந்தாலும், ஆசை எழும் நேரத்திலும், அவசியம் உள்ளபொழுதும், மனிதன் சிந்தனையை விலக்கி உணர்வின்படி நடக்கின்றான். சொத்து, சம்பந்தம் போன்ற விஷயங்களில் மனிதன் உணர்வைப் புறக்கணித்து, தேவைப்படி, உடலையொட்டி முடிவு செய்கிறான். மனம் உடையவன் என்பதாலேயே அவனுக்கு மனிதன் எனப் பெயர். அவனுடைய ஜீவனில் முக்கிய கரணமாக மனத்தைக் கூறினாலும், முக்கியக் கரணம் மனமில்லை. அது ஆன்மாவாகும். இன்றுவரை ஆன்மாவே மனிதனுக்கு முக்கிய கரணமாக உள்ளது. இருந்தாலும் இதுவே முடிவன்று. வருங்காலத்தில் சத்திய ஜீவியம் முக்கியக் கரணமாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
விஞ்ஞானம் உடலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அதிகம். அவர்கள் கண்டு கொண்டதும் ஏராளம். உணர்வைப் பற்றிப் பண்டைய நாகரீகங்கள் ஏராளமாகத் தெரிந்திருந்தனர். கல்வி பரவும்பொழுது அந்தப் புலன்கள் மறைய ஆரம்பித்தன. 12 புலன்கள் 5 ஆக மாறின. புலன் என்பது உணர்வு. உளநூல் புலன்களை ஆராய்கிறது. முடிவாகச் சொல்லக் கூடியவை குறைவு. மனம் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால் மனம் எப்படி உற்பத்தியாகிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என்று அறிஞர்கட்கு இன்றும் தோன்றவில்லை. அந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் உரிமை ஆன்மீகத்திற்கேயுண்டு. உலகெங்கும்,
  • ஆன்மீகப் பெருமக்கள் மனத்தைப் பற்றி ஏராளமாக அறிவார்கள்.
  • ஆனால் மனத்தின் ஆதி, அவசியம், அமைப்பு பற்றி இதுவரை இந்திய ரிஷிகளோ, மேல்நாட்டு விஞ்ஞானிகளோ, தத்துவ ஞானிகளோ சிந்தித்ததாகத் தெரியவில்லை.
  • ஸ்ரீ அரவிந்தம் மனம் எப்படி ஏற்பட்டது, எங்ஙனம் செயல்படுகிறது எனக் கூறுகிறது.
  • ஆன்மா, மனம், உணர்வு, ஜடம் ஆகியவற்றைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை Life Divine மூலம் கூறுகின்றது.
  • அடுத்த கட்டத்திற்கும் ஸ்ரீ அரவிந்தம் போகிறது. சிருஷ்டியை அதேபோல் ஆராய்கிறது.
மனம் உற்பத்தியான தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறி அதன் அம்சங்களை விளக்கமாகக் கருதுவோம். மனத்தின் ஆதி சத்தியஜீவியம். இது இரு பிரிவுகளாக மாறும்பொழுது இடைப்பட்ட நிலையில் மனம் உற்பத்தியாகிறது. இடைப்பட்ட நிலையில் இருப்பதால் அதனால் ஒரு பக்கம்தான் பார்வையுண்டு. ஆனால் திரும்பி அடுத்த பக்கத்தைப் பார்க்க முடியும். சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது மனம் ஏற்பட்டது. மனத்தின் கடமை பொருள்களைத் துண்டாடுவதாகும். இதுவே அதன் தத்துவம். மனத்திலிருந்து உணர்வும் வாழ்வு உடலும் (ஜடமும்) ஏற்பட்டது என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் இங்குக் கூறுகிறார். மனத்திற்கு ஞானம், உறுதி (knowledge, will) என இரு பகுதிகளுண்டு. ஞானத்திற்கு உறுதியில்லை, உறுதிக்கு ஞானமில்லை. இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஞானம் உறுதியுடன் கலந்தால் ஓரளவு தன்னை இழந்துவிடுகிறது. உறுதி ஞானத்தை ஏற்றால் சக்தி பிறக்கிறது. இந்த சக்தியே உணர்வு, வாழ்வு என நாம் அறிவதாகும். ஜடம் ஏற்பட்ட விதம் மேலும் தத்துவமானது என்பதால் மனம் செயல்படும் வழிகளைக் கருதுவோம். மனத்தின் முக்கியக் குணங்கள், தன்மைகள், அம்சங்கள், திறன்களாவன,
  • ஒன்று பலவானால் சிருஷ்டியுண்டு. ஒன்றைப் பலவாக மாற்ற ஏற்பட்ட கருவி மனம்.
  • மனம் சத்திய ஜீவியத்தின் துணைக் கருவி.
  • இதன் கடமை பொருள்களைத் துண்டிப்பது.
  • சத்திய ஜீவியம் தன் ஆதி என்பதை நினைவு கூறும்வரை மனத்திற்கு அறியாமையில்லை.
  • ஆதியை மறந்தால் மனத்திற்கு அறியாமை எழும்.
  • சிருஷ்டி சத் என்பதில் ஆரம்பித்து சித், ஆனந்தம், சத்திய ஜீவியம்வரை வந்து மனத்துடன் முடிகிறது.
  • சிருஷ்டியின் கடைசி கட்டம் மனம், ஜடமன்று.
  • வாழ்வும், ஜடமும் மனத்தின் மற்ற உருவங்கள்.
  • வாழ்வில் மனம் ஓரளவு மறைந்துள்ளது.
  • முழுவதும் மனம் வாழ்வில் மறைந்தால் வாழ்வு ஜடமாகும்.
  • மனத்தின் கருவி சிந்தனை.
  • சிந்தனையின் முடிவு அறிவு.
  • சிந்தனைக்கு அடிப்படை ஜடமான எண்ணம், உயர்வு சூட்சும எண்ணம்.
  • சிந்தனைக்குக் கருவி எண்ணம்.
  • எண்ணத்திற்கு 3 பகுதிகளுண்டு ஜடம், சூட்சுமம், காரணம்.
  • எண்ணம் முழுவதும் சூட்சுமமானால், அது அழியாது.
  • எண்ணம் மூன்றாம் நிலையான காரணத்தை எட்டினால் மனம் மேதையாகும்.
  • மூளையில் நிலவும் சொல்லான எண்ணம் ஜடம்.
  • மூளையினுள் நுழையுமுன் எண்ணம் சூட்சுமமானது.
  • நினைவு, சிந்தனை, அறிவு, கற்பனை, முடிவு, பாகுபாடு, ஆராய்ச்சி போன்றவை மனத்தின் திறன்கள்.
ஜடமும் வாழ்வும் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை. நடைமுறையில் மனம் வாழ்வாலும், ஜடத்தாலும் ஆளப்படுகிறது. தானே அதிபதி என மனம் உணர்ந்தால் மனத்திற்கு விடுதலையுண்டு. இன்று ஜடம் மனத்தை ஆள்கிறது. மனம் தானே அதிபதி என அறிந்தால் மனம் ஜடத்தை ஆளும். உடலுக்குப் பசித்தால், உணவு கேட்கிறது. இன்று பசிக்கும் பொழுது நாம் உடலைச் சும்மாயிரு எனக் கூற முடியாது. இதை ஜடமான உடலுக்கு மனம் கட்டுப்பட்டதாகக் கூறுகிறார்கள். மனம் தானே அதிபதி என்று கண்டுகொண்டால், உடலை, உனக்குப் பசி தேவையில்லை என்று கூறினால் வயிறு பசிக்காது. அதுவே மனம் ஜடத்தை ஆள்வதாகும். மனத்திற்கு மேலே ஆன்மாவுண்டு. ஜடம் உடலுக்குக் கீழேயுள்ளது. Life Divineஇல் 1039ஆம் பக்கத்தில்,
  • புறம் அகமானால், ஆன்மா ஜடத்தை ஆளும் என்கிறார் பகவான்.
அது முடிவான சித்தி. அதன் முதல் நிலைகள் நமக்குப் பயன்படும். 'கூ' என வைத்தியமுறையுண்டு. வியாதி வந்தால் அம்முறைப்படி, எனக்கு வியாதியில்லை என மந்திரமாக இடைவிடாமல் கூற வேண்டும். வியாதி குறைந்து மறையும். உடல் தனக்கு வியாதி வந்ததாக நினைக்கிறது. உடல் நினைப்பதை மனம் ஏற்கிறது. மனம் ஏற்பதால் வியாதிக்கு உயிர் வருகிறது. இதுவே 'கூ' முறையின் தத்துவம். மனம் தனக்கு வியாதியில்லை என்பதைச் சொல்வதால், மனம் வியாதியை நம்பாதே என உடலுக்குக் கூறுகிறது. உடல், மனம் கூறுவதை ஏற்றால் வியாதி குணமாகிறது.
  • மனம் விலகினால், வியாதி விலகும்.
சச்சிதானந்த சத், ஜடமாகவும்; சித், வாழ்வாகவும்; ஆனந்தம் சைத்தியப் புருஷனாகவும்; சத்திய ஜீவியம் மனமாகவும் மாறுகிறது என்பது தத்துவம்.
பரிணாமத்தால் பாதை மாறுகிறது.
சிருஷ்டி : பிரம்மம் → சத் → சித் → ஆனந்தம் → சத்தியஜீவியம் → மனம் → வாழ்வு → ஜடம்
பரிணாமம் : ஜடம் → வாழ்வு → மனம் → சத்தியஜீவியம் → ஆனந்தம் → சித் → சத் → பிரம்மம்
சிருஷ்டியில் பிரம்மம் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது. பரிணாமத்தில் ஜடம் பல நிலைகளைக் கடந்து பிரம்மமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை என்பதால் எல்லாமே பிரம்மம்.
  • ஜடம் மனமாகி, சத்தாகி, பிரம்மமாகிறது. அதுவே ஜடப்பிரம்மம்.
மனம் பிரிக்கும் கருவி. அதனால் சத்திய ஜீவியம் தரும் நிறைவை மனம் குறையாகக் காண்கிறது. தகப்பன் மகனுக்கு 1 கோடி ரூபாயை நிலம், வீடு, மனை, நகை, பணம் என அளித்தால், மகனின் மனம் வெளியூர் போகும் பொழுது கையிலுள்ள 2000 ரூபாயைக் கண்டு, அதை மட்டுமே தகப்பனார் கொடுத்ததாக நினைத்து 1 கோடி ரூபாயை, ரூ. 2000மாகக் காண்கிறது. மனம் எதிரிலுள்ளதை மட்டும் காணும் என்பதால்,
  • நிறைவைக் குறையாக நினைப்பது மனம் என பகவான் கூறுகிறார்.
  • குறையில் ஆன்மீக நிறைவைக் காண்பது சத்திய ஜீவியம்.
கையில் ரூ. 2000/- வந்தபொழுது அது தனக்குக் கிடைத்த 1 கோடியை நினைவுபடுத்தினால் அது மனம் செயல்படுவதில்லை. நம்முள் உள்ள சத்தியஜீவியம் செயல்படுவதாகும். அதனால் ரூ. 2000/- த்தில் 1 கோடியைக் காண முடியும்.
பணம் தேவை. பணமில்லாமல் வாழ்வில்லை. தேவை என்பது வேறு, ஆசை என்பது வேறு. பணத்திற்கு ஒரு குணம் உண்டு. தான் யாரிடம் உள்ளதோ, அவரைத் தனக்கு அடிமையாக்கும் திறன் பணத்திற்குண்டு. சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். பணத்தையும் துறந்தவன். பணம் வேறு, பணத்திற்குள்ள மரியாதை வேறு. பணத்தைத் துறந்த சன்னியாசி பணத்தின் மீதுள்ள மரியாதையைத் துறந்துவிட்டான் என்று கூறமுடியுமா? அன்னையிடம் வந்தவர்களில் பலர் தங்கள் சொத்து முழுவதையும் அன்னைக்குக் கொடுத்தனர். முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்திற்குப் பணத்தின் மீது மரியாதை, பற்று இருப்பதுண்டு.
  • முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு. I-94 (யோக வாழ்க்கை)
அற்புதம், அதிசயம், ஆச்சரியம் என்பவை பல்வேறு வகைப்பட்டவை. சரணாகதி என்பதற்கு இரு குணங்கள் உண்டு. நதி கடல் சங்கமமாவதை பகவான் உதாரணமாகக் காட்டுகிறார். சிறிய நதி, பெரிய கடல் சங்கமமாகி கடலின் பெரிய பரப்பில் கலந்து மறைகிறது. அடுத்த குணம் மனம் சரணாகதியை நாடினால் மனத்திற்கு அடுத்த கரணமான ஆன்மா வெளிவரும். மனத்திற்கு முந்தைய உணர்வும், உடலும் மனம் தேடும் சரணாகதியை ஏற்று அதன் பலனைத் தாங்களும் பெறுவார்கள். அதனால் ஆன்மா மலரும். அது அற்புதமாகும்.

  • அற்புதம் என்பது சரணாகதியில் சந்திக்கும் மனமும் ஆன்மாவுமாகும். I-128
மனம் என்பதன் இருப்பிடம் மூளை. அதன் கருவிகள் புலன்கள். புலன்கள் உணர்வுகளை மனத்திற்குத் தெரியப்படுத்துகின்றன. மனம் மூளை என்ற உடலுறுப்பிலிருந்து ஐம்புலன்களின் வழியாகச் செயல்படும் கரணமாகும். மனத்தின் தலையாய செயல் சிந்தனை. சிந்தனையின் முடிவும், தெளிவும் அறிவு எனப்படும். அறிதல் மனத்தின் தொழில். மனம் சிந்தனையின் மூலம் அறிதல் என்ற தொழிலில் ஈடுபட்டு உலகை அறிகின்றது. அப்படிப் பெறுகின்ற அறிவு தெளிவற்றது. மனத்தின் தெளிவை உணர்வும் உடலும் கரைப்படுத்துகின்றன. மஞ்சள் காமாலை கண்ணுக்குப் பார்ப்பனவெல்லாம் மஞ்சளாக இருக்கும். மனம் உயர்ந்த கருவியானாலும், உடலுக்கு மஞ்சள் காமாலை என்ற நோய் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படுகிறது. மனம் உடலால், அதனுடைய பசி, தாகம், தூக்கம், நோய், வலி இவற்றால் பாதிக்கப்படாத திறனுடையதன்று. மேலும் கேட்கும் செவி, பார்க்கும் கண், நுகரும் நாசி, ருசிக்கும் நாக்கு, தொடும் உடல் ஆகியவற்றாலும் பாதிக்கப்படும். பாதிக்கப்படாத சுதந்திரம் மனத்திற்கில்லை. அவை போக விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளாலும் மனத்தின் அறிவும், தெளிவும் பாதிக்கப்படும்.
உடலாலும், உணர்வாலும் பாதிக்கப்படாத மனம் காய்தல், உவத்தலில்லாத மனம். அம்மனம் தெளிவுக்குரியது. தெளிவுக்குரிய மனம், உயர்வுக்குரியது.
  • தெளிந்த உயர்வே, உயர்ந்த மனம். I-139.
சுபமுகூர்த்தம், கெட்டவேளையுண்டு. சில நேரங்கள் நல்லவை. வேறு சில நேரம் கெட்டவை. நல்ல நேரம் நல்லதைச் செய்யும். கெட்ட நேரம் கெட்டதைச் செய்யும், என்பது உலகம் உணர்ந்த உண்மை. ஸ்ரீ அரவிந்தம் இக்கூற்றை ஏற்க மறுக்கிறது. ஏனெனில், இதற்கு எதிரான அனுபவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு உண்டு. எதிரானதும் ஒரு நேரம் உண்மை என்பதால், மேற்கூறியது பொய்யாகாது. மேற்கூறியது அதை நம்புபவர்கட்கு உண்மை. நாமறிந்தவற்றை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

1. நல்லவை
2. கெட்டவை
3. நம்மைப்பொருத்து நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமைவன.
பால் அமிர்தம், எல்லோருக்கும் நல்லது. எட்டிக்காய் கசப்பு, விஷம், அனைவருக்கும் கெட்டது. கத்தியின் பலன், உபயோகத்தைப் பொருத்தது. கத்தியை உபயோகப்படுத்தத் தெரிந்தவருக்கு பலன் உபயோகத்தைப் பொருத்தது. தெரியாதவனுக்குக் கத்தி தவறாமல் கையை வெட்டும். நம் நிலையுயர்ந்தால் கருவியின் பலனை நாமே நிர்ணயிக்கலாம். நேரம் என்பது மனத்தால் ஏற்பட்ட கருவி, காலம் எனப்படும். காலமும், நேரமும் மனத்திற்குட்பட்டவை. நேரத்தின் தன்மையைவிட மனம் உயர்ந்துவிட்டால், நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் திறன் மனத்திற்கு வரும். மனம் மேலும் உயர்ந்து உயர்ந்த மனமாகிவிட்டால், அம்மனம் செயல்படும் நேரம் சுபமுகூர்த்தமாகும். நேரத்தால் மனிதன் பாதிக்கப்படுவதற்குப் பதில், மனத்தின் உயர்வால் நேரம் உயர்வாகும்.
  • நேரத்தை முகூர்த்தமாக்கும் மனம் I-225,
மனம் தெளிவை ஏற்படுத்தும் கருவி. அதே காரணத்தால் சிக்கலை உற்பத்தி செய்யும் திறன் அதற்குண்டு. இராணுவம் எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும், ஆனால் இராணுவம் ஓரூரில் முகாமிட்டால் கொள்ளையடிக்கும் பழக்கம் அந்த நாளில் உண்டு. எதிரியிடமிருந்து காப்பாற்றும் இராணுவம் கொள்ளையடிக்கும் திறனுடையது. இராணுவம் ஆயுதம் தாங்கியது. ஆயுதம் எதிரியை வீழ்த்தும். இராணுவம் பிரியப்பட்டால் அதே ஆயுதம் எந்த மக்களைக் காக்க வேண்டுமோ அவர்களைத் துன்புறுத்தும். மனம் தெளிவுக்குரிய கருவி. சிக்கலை அவிழ்ப்பதே அதன் திறன். சிக்கலை உண்டு பண்ண மனம் முடிவு செய்தால் சிக்கல் தவறாது ஏற்படும்.
  • மனம் உள்ளவரை சிக்கலுண்டு. I-263
  • மனம் திறந்து பேசுவது மனம் மகிழ்ந்து இணைவதாகும். I-329
நியாயம் என்ற சொல்லை வழக்கில் சில சமயங்களில் சௌகரியம் என்ற கருத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். திருடியவன் தன்னைத் தண்டிக்காதது நியாயம் என்று கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுண்டு. திருடியவனைத் தண்டிக்காமல் அனுப்பியபொழுது அவன் அவ்விடம் விட்டுப் போகாமல் நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். ஏன் நிற்கின்றான் என விசாரித்ததில் தான் திருடிய பொருளைக் கொடுக்கும்படிக் கேட்டான். இன்று முழுவதும் நான் இதைத் திருடுவதில் செலவு செய்துவிட்டேன், இனி எங்குப் போய் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்க முடியும், என நியாயம் பேசினான். திருடனுக்குத் தான் திருடிய பொருளின் மீது உரிமையுண்டு என அவன் நினைக்கிறான்!
"அடிபட்டவனுக்கு அழ உரிமையில்லையா?"
"பெற்றவளுக்குப் பிள்ளையை அடிக்க உரிமையில்லையா? என்பதுபோல் எனக்கு என் மருமகளைக் கொடுமைப்படுத்தும் உரிமையில்லையா?" எனக் கேட்கும் மாமியாரும், அதே மனமுடைய முதலாளி, மருமகள், சிப்பந்திகள் உண்டு.
  • கொடுமை செய்யும் உரிமையை மனம் நியாயம் என்று கூறும். I-335.
இது நம்பமுடியாததாக இருக்கலாம். இது இன்று மட்டும் உண்மையில்லை. பைபிள் காலத்திலும் உண்மை. பாரத காலத்திலும் உண்மை. இதை ஒருவரால் நம்பமுடியவில்லை என்றால், கொடுமைக்காரர் ஒருவர் பதவியிலுள்ள ஸ்தாபனத்தில் நடந்தவற்றை அவர் அறிய முற்பட்டால், உடனே புரியும். அதைவிடத் தெளிவாகப் புரியக்கூடிய இடம் ஒன்றுண்டு. அது பொறாமைக்குரிய இடம். பொறாமை பொங்கி எழுந்தால், மனம் கொடுமைச் செய்யத் துடிக்கும். முடியும் என்றால் க்ஷணம் பொறுக்காமல் அக்கொடுமையை செய்வார்கள். செய்தபின் அது தங்கள் உரிமை என்று பேசுவார்கள். சொந்தப் பிள்ளைக்கும், பெற்று வளர்த்தவர்க்கும் இதுபோல் கொடுமை செய்வதுண்டு. அங்கு அது நியாயம் எனப் பேசுவதுண்டு.
தியானத்தில் மனம் அமைதியாகும். அமைதியான மனத்தில் பல உருவங்கள் தோன்றும். அது என்ன என்று மனம் நினைத்தால் உருவம் மறையும். அவ்வுருவங்கள், காட்சிகள் மனம் அமைதியாக இருக்கும்வரை இருக்கும்.
  • மனம் மறைந்தால் திருஷ்டி கிட்டும். I-347
நாம் நல்லெண்ணம், கெட்ட எண்ணம் எனப் பிரிக்கிறோம். அன்னை எண்ணமே கெட்டது என்கிறார். மனத்தில் எண்ணம் நடமாடினால் மாசு படியும்.
  • மனம் கடந்த மாசற்ற நிலை. I-490
எண்ணத்தைக் கடப்பதுபோல், மனத்தையே கடந்தால் மாசற்ற நிலை நிலையாகும்.
காலம் என்பது சித் என்பதிலிருந்து வருவது. நம்மைப் பொருத்தவரை சித் என்பது ஜீவியம் (consciousness) - சித் என்பது சித்தம், மனம். சித் காலத்தை உற்பத்தி செய்தது என்பது தத்துவம். மனம் காலத்தை உற்பத்தி செய்கிறது என்ற கருத்து நமக்குப் பொருந்தும். புலன்களை மனம் கருவிகளாக ஏற்படுத்தியது. மனம் காலத்தையும், புலன்களையும் உற்பத்தி செய்தது எனில், புலன்களையும், மனத்தையும் கடந்தவன் காலத்தைக் கடந்தவனாவான்.
  • புலனையும் மனத்தையும் கடந்தவன் காலத்தையும், இடத்தையும் கடந்தவனாவான். I-514
உடல் அஸ்திவாரம். உணர்வு மேலெழுந்தது. மனம் அதற்கும் மேலுள்ளது. செயலில் பலன் அடிப்படைத் தோற்றம் மேலெழுந்தவாரியானது. மேலெழுந்தவாரியான மனம் மேலெழுந்தவாரியான தோற்றத்தை நாடுகிறது. உரியதை நாடுபவனும், உயர்ந்ததை நாடுபவனும் நிதானமாக இருப்பார்கள். சிறியதை நாடுபவனும், உரிமையற்றதை நாடுபவனும் அவசரப்படுவார்கள், துடிப்பார்கள், பதைப்பார்கள்.
  • பலனை விட மனம் தோற்றத்திற்காகத் துடிக்கும். I-532
மனத்தில் எண்ணம் ஓடியபடியிருக்கும். அதுவே மனத்தின் தன்மை. வானில் மேகக் கூட்டங்கள் இருந்தபடியிருக்கும். அதே போல் மனத்தில் எண்ணமிருக்கும். இருவர் இதற்கு விலக்கு. மௌனம் பெற்ற யோகிக்கும், மனம் வளராத மடையனுக்கும் மனத்தில் எண்ணம் ஓடாது. ஓடும் எண்ணம் நாடும் விருப்பத்தைக் குறிக்கும். எண்ணம் வேகமானால் உடல் பதைபதைக்கும். கடமைகளைப் பற்றிய எண்ணங்கள் கனத்தவை. அவை மனித மனத்தைப் பிடித்து உலுக்காது. ஆசை, பயம், அவா, கற்பனைக் கோட்டை ஆகியவை எண்ணங்களை உற்பத்தி செய்யும். ஒவ்வொரு வகையான எண்ணத்திற்கும் உரிய போக்குண்டு. விவரத்தைத் தேடும் மனம் ஆராயும். முடிவை நாடும் மனம் சிந்திக்கும். அர்த்தமற்ற எண்ணங்கள் அதிவேகமாக எழும். அசை போடும் மனம் அர்த்தமற்றவற்றைக் கருதும். அவை மனத்தை உலுக்கும். கனத்த எண்ணத்திற்கு மௌனமில்லாவிட்டாலும், நிதானமிருக்கும்.
  • அசை போடும் மனம் பேயாய் உலுக்கும் . I-608
மேல்மனம், அடிமனம், உள்மனம், ஆழ்மனம் என்பவை பல நிலைகள். நாமறிந்த வாழ்வு முழுவதும் மேல் மனத்திற்குரியது. உள்மனம் என்பது பரந்தது. ஒருவருடைய உள்மனம் அவரறிவதானால், அவருக்கு விலங்கு, செடி கொடிகள் பாக்ஷை புரியும். அடிமனம் தெரியுமானால் அவருக்கு வீட்டினுள்ளிருக்கும்பொழுதே தெருவில் வருவது யார் எனத் தெரியும். நாம் இன்று வாழும் வாழ்வு முழுவதும் மேல் மனத்தைச் சேர்ந்ததேயாகும்.
  • முழு வாழ்வும் மேல் மனத்திற்குரியது. I-626
  • தூய மனம் தூய ஆன்மாவை அடைவது மோட்சம். I-634
  • மனம் உடலின் அதிபதி. I-735
செப்புப் பாத்திரத்தை மாற்றி வேறொரு பாத்திரமாக்க அதை அனலிலிட்டு உருக்க வேண்டும். பழைய வீட்டை வாங்கி புது பேஷனில் கட்ட வேண்டுமானால், பல இடங்களை இடிக்க வேண்டும். தோண்ட வேண்டும், கூரையை இறக்க வேண்டும். ரிப்பேர் முடிந்தபின் வீடு அழகாக, அலங்காரமாக இருக்கும். இடைநிலை கோரமாக இருக்கும். மனம் இன்றைய நிலையை விட அதிகத் தெளிவு பெற உள்ளதைக் கலைத்து புதியதை நிறுவுமுன் இடைநிலை பயங்கரமாக இருக்கும். மனத்திற்கு அது பைத்தியம்போல் தோன்றும்.
  • தெளிவுக்கு முந்தைய பைத்தியம். I-777
  • மனம் மாறினால் ஜடம் திருவுருமாறும். I-880
  • திருட்டு ஆசையை நாடும் மனம் பிரம்மத்தைத் திருட்டில் வெளிப்படுத்துகிறது. I-901
Stolen pleasure is sweet, திருட்டு ஆசைக்கு ருசி அதிகம் என்பது பழமொழி. மறைவாகச் செய்வதால் திறமை அதிகமாகத் தேவை என்பதால் ருசி அதிகமாக இருக்கும். மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என மாறும்பொழுது சரி என்பது எல்லாக் கட்டங்களிலும் தப்பாகத் தெரியும். மனம் மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளாது. பாரத யுத்தமும், கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும் இதற்கு உதாரணம். திருவுருமாற்றத்தை நாடினால், நாம் கிருஷ்ணபரமாத்மா செய்தவற்றைச் செய்ய வேண்டியிருக்கும். கிருஷ்ணன் தெய்வம். தெய்வம் எதையும் செய்யலாம். நாம் தெய்வமாக நடக்க முடியாது என்பதால் கிருஷ்ணன் சொன்னதைச் செய், செய்ததைச் செய்யாதே என்றார் பெரியோர். ஸ்ரீ அரவிந்தத்தை ஏற்க வேண்டுமானால் கிருஷ்ணன் செய்தவற்றைச் செய்ய வேண்டும். எப்படிப் போவது? கிருஷ்ணன் எதிரிகளுக்குச் செய்த துரோகம், தவறான யுக்திகளை கிருஷ்ணன் என்ன மனநிலையில் செய்தானோ அம்மனநிலையில் செய்ய வேண்டும் என்பது பொருத்தமான பதில்.
  • செய்யும் மனப்பான்மை சரியானால், எந்த முறையும் தவறாகாது.
திருட்டு ஆசை தவறு. அதனால் அது கூடாது. திருடினாலும் பிரம்மம் உண்டு. பிரம்மத்தைத் திருட்டில் காண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் பிரம்மத்திற்காகத் திருட்டையும் ஏற்க வேண்டும். ஏற்கும் மனப்பான்மை, பிரம்மத்திற்குரியதாக இருக்க வேண்டும், திருட்டுக்குரிய மனப்பான்மையாக இருக்கக்கூடாது. பிரம்மத்திற்குரிய மனப்பான்மையுடன் திருட்டை ஏற்றால் அது திருடாக இருக்காது, திருவுள்ளமாக இருக்கும்.
  • தரித்திரம் போனாலும் மனம் தத்தளிக்கும். I-923
இம்மனநிலையை முன்னோர் அறிந்ததால் விருதுபட்டிக்குப் போன சனியனை வீடுவரை வந்துவிட்டுப் போ என்ற பழமொழியைச் சொன்னார்கள்.
  • உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும். II-26
ஓர் எண்ணம் சரியில்லை என்றால், நம்மால் அதை ஒதுக்க முடிவதில்லை. நம்மை மீறி மனம் ஏதாவது நடக்காதா என எதிர்பார்க்கும். மறுக்கும் எண்ணம் உணர்வு பெறுவது எதிர்பார்ப்பதாகும். மனம் எப்படி எதிர்பார்க்கும்? எந்தச் சட்டப்படி, எந்த நியாயப்படி எதிர்பார்க்கும் என்று நம்மால் நிர்ணயிக்க முடியாது. நம் அறிவைக் கடந்த நிலையில், நம் கற்பனை இதுவரை கருதாதவற்றையும் எதிர்பார்க்கும் திறனுடையது மனம்.
  • மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும். II-29
நம் மனத்தை நாம் அறிவோம் என நினைப்பது தவறு. நாம் அறியாத எண்ணங்கள், நாம் அறிய முடியாத எண்ணங்கள் நம் மனத்துள்ளிருக்கும். ஆசைக்கு சந்தர்ப்பம் வந்தபொழுது, அதை மறுக்கும் நிலை ஏற்பட்டபொழுது மனம் பாடுபடுவதை அறிந்தவருக்கு அது புரியும். புத்தி தெளிவாக இருந்தாலும், உணர்வு மாறுபட்டிருக்கும்.
  • பிறரைத் தீண்டும் மனம் உறவை விஷமாக்கும். II-68
உறவு என நாம் கூறுவது இரத்தபாசம். Human relationship என்பதை நாம் உறவு என்ற சொல்லால் குறிப்பிட்டால் சொந்தம் எழுந்து தெளிவு மறையும். உடன் பிறந்தவர், தம்பதிகள், வியாபாரக் கூட்டு, நட்பு இவற்றுள் உள்ள மனித உறவை நான் உறவு எனக் குறிப்பிடுகிறேன். அண்ணனுக்கு 9 பிள்ளைகள் தம்பிக்கு 1 பிள்ளை. சட்டப்படி சமமானாலும் தம்பி அண்ணனுக்குப் பெரிய பாகம் கொடுப்பது, கணவன் கடனுக்குத் தன் நகைகள் அனைத்தையும் கொடுத்த மனைவி, கூட்டில் கூட்டாளி தன் கடனைக் கொடுக்க சம்மதப்பட்ட கூட்டாளி தன் பங்கை விட்டுக் கொடுப்பது, நண்பனுக்கு உபரி இலாபம் வர பிரதிபலனின்றி உழைத்த நண்பன் ஆகியோர் இரத்தபாசத்தையும், திருமணக்கடமையையும், வியாபார நிர்ப்பந்தங்களையும், நட்பின் உரிமையையும் விட்டுக் கொடுத்த மனித உள்ளம் உள்ளவர்கள். மனித நேயத்தைக் கடந்த தெய்வச் சாயல் உள்ள உறவுகள் இவை. இவ்வுறவில் ஆதாயமாகவோ, ஆபாசமாகவோ, கணக்குப்படியோ பேசுவது தவறு. பேசினால் உறவு தன் உயர்ந்த நிலையை இழக்கும்.
  • பெரிய பாகத்தைப் பெற்ற அண்ணன், நீ விட்டுக் கொடுத்தது உண்மைதான், ஆனால் என் கஷ்டம் தீரவில்லையே என்பதுண்டு.
  • "உன் நகை கடனை அடைத்தது, இன்று பிழைக்க வழியில்லையே" எனக் கணவன் கூறுவான்.
  • "உன் பங்கு இலாபம் என் கடனை அடைத்தது உண்மைதான். இன்று முதல் போதவில்லையே".
  • "இலாபம் வந்தது உண்மைதான். ஆனால் மரியாதை வரவில்லையே" எனக் கூட்டாளியும், நண்பனும் பேசினால் மனம் உடைந்துவிடும். இவற்றை மனிதனால் பொறுக்க முடியாது. ஆனால் இதைக் கடந்த நிலையுண்டு. கணவன் மனைவியிடம் நான் விரும்பிய பெண் வேறு என்று கூறினால், அடுத்தவளை கணவன் மனம் தீண்டினால், அதன் பிறகு அங்கிருப்பது திருமணமில்லை. வெறும் உறவுதான்.
  • நேரடியாக மனம் சத்திய ஜீவியத்தை அடைய முடியுமென்றாலும்  அது அரிது  II-74
நாட்டில் தலைமைப் பதவியை நாடுபவர் படிப்படியாக உயருவதே இயல்பு. அதுவே கஷ்டம். நேரடியாக நாட்டின் தலைமைப் பதவிக்கு இந்திராவும், ராஜீவும் வந்தது அரிது. ஆன்மீகச் சட்டம் மனம் சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைய அனுமதிக்கும். ஆனால் நடைமுறையில் அது அரிது. படிப்படியாக உயருவதே முடியக்கூடியது. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் அப்படி உயர்ந்தவர்களே. அன்னை சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைந்தவர்கள். நான் கொல்லைப் புறமாக வந்தேன் என்றார். பகவான் அவதாரப் புருஷர். 6 வருஷ காலத்தில் அத்தனை யோக சித்திகளும் அவரைத் தேடி வந்தன. அவர் இதைக் கூறினால் நாம் எங்கே?
  • மனம் உணரும் ஆனந்தம் அழகு. II-176
சச்சிதானந்தத்தில் உள்ள ஆனந்தத்தை மனமும், உணர்வும், ஆன்மாவும் காண முடியும். ஆன்மாவின் பார்வைக்கு ஆனந்தம் அன்பாகத் தெரியும். உணர்வில் ஆனந்தம் சந்தோஷமாகத் தெரியும். மனத்தின் கண்ணில் ஆனந்தம் அழகாகத் தெரியும்.
  • மனம் ஏற்காவிடில் எதிரான பலனிருக்கும். II-337
இது முக்கியமான செய்தி. ஆன்மீகப் பலனைப் பெறும் தகுதியைக் குறிக்கிறது. பெறுபவர் எக்காரணத்தாலோ தன்னை உயர்வாகக் கருதினால், தாழ்ந்தவரிடமிருந்து ஆன்மீகப் பலன் பெற முடிவு செய்தால், அதை அவர் மனம் ஏற்காவிட்டால், பலன் எதிராக இருக்கும். வயதாலோ, படிப்பாலோ, ஜாதியாலோ, பெண் என்பதனாலோ, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமிருந்து தீட்சை பெற முடிவு செய்தவர் பெறும் பலன் தீட்சையாக இருக்காது. தீட்சை பெற்றவுடன் அவருக்கு நோய் அல்லது விபத்து வரும். தீட்சை, ஆசி, அனுக்கிரஹம், கருணை ஆகியவை உயர்ந்தவை. தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் அதைப் பெற முடியாது. பெற முன் வந்தால் வீட்டில் தவறு நடக்கும். அது விலக்கப்பட வேண்டியது. குரு ஸ்தானத்தில் உள்ளவர் இதற்குச் சம்மதிக்கமாட்டார்.
  • அடங்கிய மனதை சுயநலம் மறக்கும். II-584
உடலும், உணர்வும் தேவை எழும் நேரம் அடக்க முடியாத வேகமுள்ளவை. மனத்திற்கும் அது உண்டு என்றாலும், பொதுவாக நாம் அதைக் காண்பதில்லை. மனிதன் விரும்பித் தவறு செய்வதுண்டு. தவறே மனதில் எழாத நேரம் பிறர் மூலம் ஆசையைச் சந்தர்ப்பம் கிளப்புவதுண்டு. முதல் நிலையிலுள்ளவனுக்கு நாம் சொல்லக் கூடியதில்லை. அவனுக்கே அவன் செய்வது தவறு என்று புரிய வேண்டும். தானே தவற்றை நாடி நான் போகவில்லை. பிறரால் நான் கெட்டுப் போனேன் என்பவன் செயலைப் பொருத்தவரை முந்தைய நிலையிலுள்ளவனிலிருந்து வேறுபட்டவனில்லை. எந்த அளவுக்கு மாறுபட்டவன்? ஏன் அந்த நிலை?
பிறர் தூண்டுதலையும் புறக்கணித்து முறையாக நடப்பவன் மனிதன். பிறர் தூண்டுதலுக்கு இரையானதற்குக் காரணம் மன உறுதியில்லை எனலாம். மன உறுதியுடன் எல்லா இடங்களிலும் நடந்தவருக்கும், பிறர் தூண்டுதல் சில சமயங்களில் காலை வாரி விடுவதுண்டு. அதற்குரிய பல காரணங்களில் ஒன்று கர்ம பலன். அதுவும் தன்னுடைய கர்மமாக இருக்கலாம். பிறர் கர்ம பலனில் தான் பங்கு கொண்டதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பலியானவன் பங்கு என்ன?
"வேகம் உள்ளத்தில் மறுக்க முடியாததாக இருப்பது ஒரு காரணம்"
மறுக்க முடியாத வேகம், அடக்க முடியாத உணர்ச்சி, பிறரைத் தூண்டச் செய்யும். நம்முள் உள்ள வேகம் அடக்க முடியாததானால், வெளியிலிருந்து சுயநலம் நம்மைத் தூண்டும். இது மனத்தின் தன்மை.
பூர்த்தியான மனத்திற்குப் புரியாதது இல்லை. II 713
எந்தக் காரியத்தை முடிப்பதும் பிரார்த்தனையால் முடியும். இது திறமையின் முதற்படி. அடுத்த கட்டத்தில் திறமை என்பது இனிமையான மனம். முதல் நிலை உடலுக்குரியது, அடுத்தது உணர்வுக்குரியது. மூன்றாம் கட்டத்தில் மனம் செயல்படுகிறது. மனம் தவறாது காரியத்தை முடிக்க, எனக்குப் புரியாதது இல்லை என்று சொல்ல வேண்டும். அம்மனம் பூர்த்தியானது.
  • மனத்தால் சரணாகதியை ஏற்பது மலை ஏறுவது போலாகும். II-869
சரணாகதிதத்துவத்தை கீதை மேற்கொண்டது. வைஷ்ணவர்கள் பின்பற்றுவது. நாயனார்கள் போற்றியது. மோட்சத்தை நாடி சரணாகதியை இவர்கள் மேற்கொண்டார்கள். நாம் நாடுவது மோட்சமன்று, பரிணாமம், திருவுருமாற்றம். இதற்குத் தேவையானது சரணாகதி என்றால் சொல் ஒன்றே என்றாலும், பொருள் வேறு. முதலீடு செய்து தொழில் செய்கிறோம். சிறிய தொழிலுக்கும் முதல் வேண்டும், பெரிய தொழிலுக்கும் முதல் தேவை. இரண்டுக்கும் தேவையானது முதல் என்றாலும் பெரிய தொழிலுக்குத் தேவையானது பெரிய முதல். வித்தியாசம் பெரியது.
  • மோட்சம் பெற ஆசையையும், அகந்தையையும் சரணம் செய்ய வேண்டும். அகந்தை என இங்கு குறிப்பிடுவது ஒரு கரணத்திற்குரிய அகந்தை.
  • பரிணாமம், திருவுருமாற்றம் பெற சரணாகதி தேவை என்றால் மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகிய நான்கையும் சரணம் செய்ய வேண்டும். இவற்றுள் 4 கரணங்கட்குரிய அகந்தைகள் அடங்கியுள்ளன. 4 அகந்தைகளும் சரணம் செய்யப்படவேண்டும்.
  • பகவான் சரணாகதி கடினம் என்கிறார்.
  • சரணாகதியை இதுவரை ஏற்றவர்கள் பகவானும், அன்னையும் மட்டுமே.
எல்லாக் கரணங்கட்கும் உரிய எல்லா அகந்தைகளையும் மனம் மட்டும் சரணம் செய்ய முடியாது. பூரண யோகம் ஒரு கரணத்தால் மனத்தால் செய்யப்படுவதன்று. அதனால் பூரணமான செயலை ஒரு கரணம் மனம் மேற்கொள்வது மலை ஏறுவது போலிருக்கும்.
  • மனத்தைக் காண முடியாது. எண்ணத்தைக் காணலாம். II-916
10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு 10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம் ஏற்பட்டு எண்ணினார்கள். 9 பேர் எனத் தெரிந்தது. ஒவ்வொருவரும் எண்ணினார்கள். முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் என அழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக எண்ணிக் காட்டியதாகக் கதை. எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம். வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.
எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும். நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது. உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம். உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது. மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.
ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு. தம் குறைக