Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label ஆன்மிக சிந்தனைகள். Show all posts
Showing posts with label ஆன்மிக சிந்தனைகள். Show all posts

Saturday, December 24, 2011

கடவுள் நம்பிக்கையின் பலன்

* நாம் முதலில் தெய்வங்களாவோம், பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், "ஆகுக', "ஆக்குக' என்பவையே நமது குறிக்கோள்.
* பசியை போக்கிவிட்டு தத்துவ போதனைகளையும், சமய பிரசாரத்தையும் செய்யுங்கள், ஆன்மிகம் எழுச்சி பெறும்.
* மனிதனிடம் ஒளிந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வர புறவாழ்க்கையிலும், அக வாழ்க்கையிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
* பெண்மையின் இலக்கணமாக சீதை, சாவித்திரி, தமயந்தி ஆகியோர் உள்ளனர். இவர்களை தினமும் நினைத்துப் பாருங்கள்.
* பரம்பொருளாகிய கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் நாம் பலம் பெற்றிருக்கிறோம். சிங்கம் போல் தைரியம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.
* பலமின்மையே துயரத்திற்குக் காரணம். பலவீனம் இல்லாதவனுக்கு மரணமும் இல்லை, துன்பமும் இல்லை.
* இறக்கும் வரை பணி செய்யுங்கள், சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண ஆசையில் முழ்கி ஒரு புழு போல இறப்பதைக் கைவிட வேண்டும்.
- விவேகானந்தர்

ஏழைகளிடம் வசிக்கும் இறைவன்

* நன்மை பெற வேண்டுமானால் வாழும் தெய்வமாகிய மனிதர்களை வழிபடுங்கள். அதாவது ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கம்.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறோம்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே, அவரை உண்மையாக வணங்குபவனாவான்.
* எதிர்வாதம் எதுவுமின்றிக் குருவிற்குக் கீழ்ப்படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக பின் பற்றுதலும் வெற்றி பெறுதற்குரிய ரகசியங்களாகும்.
* பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.
* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். அச்சமுள்ளவன் உலகில் வாழத் தகுதியற்றவன்
- விவேகானந்தர்

தவறுகளையும் வாழ்த்து!

* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால் இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது மிக நல்லது.
* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்.
* விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையானால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய். மனிதர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் கடவுளுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.
* கடவுள் மீது நம்பிக்கை வைத்து துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டினால் உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயம் வந்தே தீரும்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள், நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
- விவேகானந்தர்

எல்லாரும் உயர்ந்தவர் தான்!

*நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமைஉள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற வரை உண்மையான பக்தி ஏற்படாது.
* தன்னை அடக்கியாளப் பழகியவன் வெளிஉலகிற்கு வசப்படமாட்டான். அடிமைத்தனமும் அவனிடம் இல்லை. அத்தகையவனே உலகத்தில் வாழ தகுதி பெறுகிறான்.
* மக்களின் எண்ணிக்கையே செல்வம். மாறாக வறுமை முக்கியமல்ல, சொல், செயல், சிந்தனைகளால் ஒன்றுபட்டு விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.
* கடலைப் பார்; அலையைப் பாராதே, எறும்பிற்கும் தேவதூதனுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. ஒவ்வொருவனும் தனது நிலையில் பெரியவனே.
* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு புரியும் ஓயாப் போரே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்.
- விவேகானந்தர்

கடைசி பருக்கையையும் கொடு!

* இறைவனுக்கு பணி செய்ய விரும்புபவர் மக்களுக்கும், உலக உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். ஈசனுக்கு தொண்டு செய்பவரே உத்தமத் தொண்டராவார்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே இறைவனை உண்மையாக வணங்குபவனாவான்.
* கோயிலில் இறைவனை வணங்குபவனிடம் அடையும் மகிழ்ச்சியை விட, ஏழைக்கு பணி செய்பவனிடம் இறைவன் அடையும் மகிழ்ச்சி மேலானதாகும்.
* புண்ணியத்தலங்களை தரிசித்தவனிடம் தன்னலம் இருந்தால், இறைவன் அவனிடம் மிகத்தொலைவிலேயே இருப்பான். தன்னலத்தை மறந்து பொதுநலத்துடன் வாழ வேண்டும்.
* மனத்தளர்வு வெற்றிகரமான வாழ்வுக்கு வழிவகுக்காது. உறுதியோடும், இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவே மேலான நன்மையை பெறவைக்கும்.
* பிறருக்கு வழங்கவே கையை இறைவன் படைத்தான். பட்டினியாக கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடு. பிறருக்கு வழங்குவதால் நீ முழுமையடைவதுடன், தெய்வமாகவும் மாறுவாய்.
-விவேகானந்தர்

வரலாறு உன்னை வாழ்த்தட்டும்!

* பிறர் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரிவதில் இருந்து தவறமாட்டார். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழக்கூடாது.
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* எல்லா உயிர்களும் தெய்வம் என்பது உண்மையே. ஆனால், அனைத்திலும் உயர்ந்த தெய்வம் மனிதனே.
* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்கே திருமகளின் அருள் கிடைக்கும்.
* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவு தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம். இது தூங்குவதற்கான தருணம் அல்ல.
* ஆணோ பெண்ணோ, வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தன்னம்பிக்கை தான். என்னால் இயலாது என்று சொல்பவர்கள் வரலாற்று புத்தகத்தைக் கூட தொடுவதற்கு தகுதியற்றவர்கள்.
- விவேகானந்தர்

நீங்கள் பாக்கியசாலிகள்!



* நல்லவர்கள் பிறருடைய நன்மைக்காக வாழ்கின்றனர். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாக என்னுடைய நன்மையை நான் பெறமுடியும். இதைத்தவிர வேறு வழி இல்லை.


* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் அனைத்து வழிபாடுகளின் சாரம்.


* இறைவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.


* நாய்க்கு சோறு கொடுக்கும் போது, அந்த நாயையும் கடவுளாகக் கருதி வழிபடு. ஏனெனில், அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார், எல்லாவற்றிலும் இருக்கிறார்.


* ஏழைகளிடம் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுபவன் ஆகிறான். விக்ரகத்தில் சிவனை வழிபடுவது ஆரம்பநிலை தான்.


- விவேகானந்தர்

பொறுமைக்கு பெரிய பரிசு

* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உன்னிடம் இருக்கும் வரை அனைத்து செயலும் முன்னேற்றமடையும். இறைவன் அருளால் அபாயம் எதுவும் ஏற்படாது.
* பூமி மாதாவை போன்று அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.
* நன்மைகளைப் பெற வேண்டுமானால், வாழும் தெய்வமாகிய ஒவ்வொரு மனிதனையும் வழிபடுங்கள்.
* ஏழைக்கு உதவி செய்வது என்பது, கோயிலில் சிவனை கண்டு வணங்குபவனிடம் சிவன் அடையும் மகிழ்ச்சியை விட மேலானதாகும்.
* கடவுள் வரம்பு கடந்த பெருமைகளை உடையவர். அவரை வணங்கி துய்மையான மனதைப் பெறலாம்.
* இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரையே எப்போதும் சார்ந்து நில்லுங்கள்.
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே. நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்தில் ஒருவன் கேட்டால், கடைசிப் பருக்கையையும் கொடுத்துவிடு. அப்போது, நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் ஆவாய்.
- விவேகானந்தர்

ஆன்மிக பலமே நாட்டின் பலம்

* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்பியிருக்கிறது. அதுபோல, வளர்ந்த பின்னும் மனிதன் தன் தேவைகள் அனைத்திற்கும் உலகநாயகியான ஜகன்மாதாவையே நம்பி வாழ்கிறான்.
* அனைத்து சக்தியும் கொண்ட அம்பாள் கருணை வடிவத்துடன், எங்கும் நிறைந்திருக்கிறாள். உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறாள்.
* இந்தியாவில் பெண்களுக்கு தரப்படும் மதிப்பு உயர்வானது. தெய்வத்தை அன்னையாகக் கருதி வழிபாடு செய்தால், ஆன்மிக வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* குழந்தைகள் தாயிடமே அதிக பாசத்தை காட்டுகின்றனர். இதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய்க்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே நாடு எழுச்சி அடையப்போகிறது. கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள்.
* மனிதன் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளனாக இருக்கிறான். அவனுக்கு தேவையான அனைத்து வலிமையும், உதவியும் அவனுக்குள்ளேயே இருக்கிறது.
-விவேகானந்தர்

உறுதியுடன் செயல்படுங்கள்

* தெய்வத்தைப்பற்றி பேசும்போது பசியால் நலிந்து வாழும் மக்களிடையே பேசுவதால் எந்த பயனும் இல்லை. அது அவர்களை அவமதிப்பது போல் ஆகும். பசித்தவனிடம் ஆன்மிகம் பேசி பயனில்லை.
* மனிதனிடம் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அதைவெளிக்கொண்டு வருவது தான் லட்சியமாக இருக்க வேண்டும்.
* முதலில் நாம் தெய்வங்களாவோம். பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். "ஆகுக', "ஆக்குக' என்பதே நமது குறிக்கோள்.
* நீதி நூல்களின் லட்சியம் சுயநலமின்மையே. பிறருடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு சிந்திப்பது சிங்கத்திற்கு சமமான ஆற்றலை இதயத்திற்கு தருகிறது.
* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து மனவுறுதிடன் வீரனாக இருங்கள், மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள், வாழ்ந்து மறைந்த பிறகு ஒரு அழியாத அறிகுறியை விட்டு செல்லுங்கள். உறுதியுடன் செயல்படுங்கள்.
-விவேகானந்தர்

அதிகம் பெருமைப்படாதே!

* நல்ல நூல்களைப் படிப்பது, சொற்பொழிவுகளை நடத்துவது இவற்றைவிட அன்பால் மட்டுமே ஆன்மிகத்தில் மேம்படமுடியும்.
* தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டால், அவன் இருப்பதை உணரலாம்.
* பக்தனாக விரும்புகிறவன், சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளை துவக்கத்திலேயே விட்டுவிட வேண்டும்.
* வெறுப்பையும், கோப உணர்ச்சியையும் அடக்கும் போது, அந்த அளவிற்கு நல்ல ஆற்றலை சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த ஆன்மிக சக்தியாக மாறுகிறது.
* ஆன்மிக அறிவால் மட்டுமே நமது துன்பங்களை என்றென்றைக்கும் ஒழிக்க முடியும். மற்ற அனைத்து அறிவும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீக்கும்.
* உன்னைப்பற்றி அளவுக்கு மீறி பெருமை கொள்ளாதே. பிறர் பெறாத அந்த புகழை உனக்கு அளித்தது இறைவனின் அருளே. அதை ஒரு வழிபாடாக செய்.
விவேகானந்தர்

தியானம் பழகுங்கள்

* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் நாள்தோறும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் மனநிலை உண்டாகும். அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும் பாவங்கள் செய்து இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கைகால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் மனவுறுதியை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-காஞ்சிப்பெரியவர்