Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label ஆன்மா. Show all posts
Showing posts with label ஆன்மா. Show all posts

Sunday, November 6, 2011

ஆன்மா

இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது. ஆன்மா என்றவடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.

ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.


தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம். தரிசனங்கள், சமயப் பிரிவுகள் எல்லாம் வெவ்வேறு கொள்கைகளை உடையவை. தங்களுடைய கொள்கைகளே சரியானவை என்று நிலைநாட்ட அவை அற்புதமான காரணங்கள் காட்டும். என்னுடைய சொந்த அனுபவத்தைப் பற்றித்தான் நான் பேச முடியும்: ஆன்மா தெய்வத்தன்மையுடையது, பரம்பொருளின் ஒரு நித்தியமான பாகம், அதனுடைய தர்மத்தைத் தவிர வேறு எந்த தர்மத்தாலும் அதற்கு வரம்புகட்டவோ தலையிடவோ முடியாது.


இந்த ஆன்மாக்கள் இறைவனால் அவனுடைய வேலையைச் செய்வதற்காக அவனிடமிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விசேஷ நோக்கத்துடன், ஒரு விசேஷ வேலைக்காக, ஒரு விசேஷ ஊழுடன் பூமியின் பிறக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய, விலக்க முடியாத தர்மம் உண்டு, அது பொதுவிதியாக இருக்க முடியாது. ஆகவே, நித்தியமான சிருஷ்டியில், நம்மால் கற்பனை செய்யக்கூடியவை எல்லாமும் கற்பனை செய்ய முடியாதவையும் கூட இருக்கவே செய்யும்.


ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.
ஒருவன் மனிதனுடைய ஆன்மாவுடன் பேசும்போது உடலில், இனவகையில் அல்லது பண்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், எப்போதும் ஒரே ஆன்மாவுடனேதான் பேசுகிறான்.ஆன்மாவால் இறைவனை நினைக்க முடியாது, ஆனால் உறுதியுடன் அவனை அறியும். ஒரு மலர் சூரியனைக் கண்டு மலர்வதைப்போல உன் ஆன்மா இறை ஒளியைக் கண்டு மலரும்.
 நான் எனது ஆன்மாவை முன்னேறச் செய்வது எப்படி?


உன்னுடைய ஆன்மா மீது செயல்பட வேண்டுமானால் முதலில் நீ அதை உணர வேண்டும். நீ உன்னுடைய ஆன்மாவை உணரும்போது, நீ உன்னுடைய ஆன்மாவை முன்னேறச் செய்யவில்லை உன்னுடைய ஆன்மாதான் நீ முன்னேற உதவுகிறது என்பதை நீ உணரக்கூடும்.ஆன்மா என்பது என்ன, அது எந்த வடிவில் நம்முள் இருக்கிறது?முதலில் ஆன்மா இறைவனிடமிருந்து வந்த ஒரு ஒளிப்பொறியின் வடிவில் இருக்கும்.  பரிணாமத்தின் மூலம் அது தனித்தன்மை பெற்ற ஜீவனாகிறது, அதன்பிறகு அதனால் தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

ஆன்மா தன்னை எதுவாக அறிகிறதோ, எதுவாக உள்ளதோ, அதுவாக மனம், உயிர், உடல் ஆகவேண்டும், அதுவாக வாழவேண்டும்.ஒருவனுடைய ஆன்மா விழித்துவிட்டபின் அதைத் தள்ளிவிடுவது எளிதல்ல, ஆகவே அதன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்துவிடுவதே நல்லது.
உன்னுடைய ஆன்மாவுக்குக் கீழ்ப்படி, அது ஒன்றுதான் உனது வாழ்க்கையை ஆள்வதற்கு உரிமை உடையது.

 சைத்திய மையம்: ஒளி பொருந்தியது, அமைதியுடையது, அது மனித ஜீவனை ஆள்வதற்காக உண்டாக்கப்பட்டது.சைத்திய புருஷன் ஜீவன் முழுவதையும் ஆளும்போது அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது. சைத்திய ஆற்றல் இயற்கையின் செயல்களை முன்னேறச் செய்வதற்காக அவற்றை ஒழுங்குபடுத்துகிறது.சைத்திய புருஷன் செல்வாக்குப் பெற்றிருக்கும்போது எல்லாச் செயல்களும் சமநிலை பெறுகின்றன. சைத்தியச் செல்வாக்கு தூல ஜீவனை இறைவனை நோக்கித் திரும்பும்படி கட்டாயப்படுத்துகிறது. இந்த வீடு சைத்திய புருஷனின் சின்னமாக நித்தியமான தெய்வீக சாநித்தியத்தின் கோயிலாக இருக்கட்டும்.சைத்திய மையத்தின் உணர்வில் வாழ், அப்பொழுது உன்னுடைய இச்சா சக்தி இறைவனின் சங்கற்பத்தை மட்டும் வெளிப்படுத்தும், அப்பொழுது உருமாற்றமடைந்த ஜீவனால் இறைவனின் அன்பைப் பெறவும் அதை வெளிப்படுத்தவும் இயலும்.

மனிதனின் மையம் சைத்திய புருஷனே, அது அந்தர்யாமியாகிய இறைவன் உறையும் கோயில். ஒருமைப்படுத்துதல் (Unification) என்றால் ஜீவனின் செயல்களெல்லாம் (மனம், பிராணன், உடலின் செயல்கள்) இறைவனின் சாநித்தியத்தின் இச்சையின் சரியான வெளிப்பாடாக இருக்குமாறு சைத்திய மையத்தைச் சுற்றி ஒழுங்கு செய்தலும் இசைவுபடுத்துதலும் (Harmonisation) என்று பொருள்.


நான் யார்
இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’.

நான் என்பது நான் இல்லை, எண்ணம் ஒன்றுமே நானாக இருக்கிறது.

அது நீ
தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் சம்பாஷணையில் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை
இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு
ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.

ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்
அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம். பிருகதாரண்யக உபநிஷத் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிருகதாரண்யக உபநிஷத் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.
ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச. பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது.

Saturday, November 5, 2011

ஆன்மா என்பது எது ?


 ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி கோடி சூரிய பிரகாசம் உடையது.அதில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இது எல்லா ஜீவ
 ராசிகளிலும் உள்ளதாகும் பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் எடுக்கிறது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .
இது மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனிதேகத்தில் புருவமத்தியில் இருந்துகொண்டு உள்ளது .அதற்கு லலாடம் ஸ்தானம் என்பார்கள் .அதன் வண்ணம் கால பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் .பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .
அதன செயல் பாட்டிற்க்காக ஐம புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்குப் பெயர் உபகாரக் கருவிகலாகும்.அதுதான் கண், காது,மூக்கு,வாய் உடம்பு என்பதாகும் .இவை கண்களுக்குத் தெரியும் .இவைகள் மூலமாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.
இந்திரியங்கள் என்னும்;-- கண்,காத்து ,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும் 
கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் ,என்பதாகும்
ஜீவன் என்னும் ;--உயிராகும் .
ஆன்மா என்பது .;--அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.
ஆன்மா எனபது இல்லை என்றால் எதுவும் இயங்காது .ஆன்மாவின் தேவைக்காக அனைத்து கருவி காரணங்களையும்,அதுவே உருவாக்கிக் கொண்டு உள்ளதாகும்.ஆதலால் ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.
ஆன்மா உண்மையை அறிந்து கொள்ள கருவிகளை இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுள்ளது.ஆனால் புறத  தோற்ற க் கருவிகளான ஐம புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றம் உள்ள அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிருக்கு மாயா சத்தியின் பலம் உள்ளது, மாயா சத்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].
அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளில் பலவிதமாக சொல்லி உள்ளார்கள் .மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .
உடம்பின் முக்கிய கருவிகள் எது என்றால் .கண் ,மனம் ,என்பாதாகும் .கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது அனைத்தும் செய்யும் .அதனால்தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் .கண் போகும் இடம் மனம் போகும் .கண்கள் வெளியே செல்லாமல் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.எப்படி தொடர்பு கொள்ள முடியும்? அதற்குததான் தியானம் ,தவம .யோகம ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் .
ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் அப்படி செய்ய வேண்டும் ?என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?நாம் மாயா சத்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்க்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் ,தவம ,யோகம ,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருனயமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அடையமுடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவர்போல் வாழ்ந்தால்தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் காணமுடியாது அருள் பெற முடியாது ''நான என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;-- 
கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே 
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே 
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்தது இல்லீரே 
விண்டதினால் என்ன நீர் சமரச சன்மார்க்க 
மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்தே 
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் 
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !
அடுத்து ஒரு பாடல் .;-
உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர் 
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே அறிவீர் 
மடம் புகு பே ய் மனத்தாலே மயங்குகின்றீர் மனதை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி வகையை அறியீர் 
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே 
எண்ணி எண்ணி இளைகின்றீர் ஏழை உலகிலீர் 
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம் 
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !.,.