இது ஒரு ரகசியம் ,அதாவது எதையும் எயந்திரமாக செய்யாமல் ,அதாவது உங்களுடைய எந்த ஒரு சிறு செயலையும் இயந்திரத்தனமாக செய்யாமல் உங்களுடைய முழு பிரைஞை இல் செய்தால்,உங்களுடைய முழு வாழ்வும் ஒரு தியானம் ஆகிவிடும் .பிறகு உணர்வுடன் குளிப்பது ,சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவது .நண்பர்களுடம் உரையாடுவது எல்லாமே தியனமாகிவிடும் .
ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் . தியானம் என்பது ஒரு தன்மை .அந்த தன்மையை நீங்கள் எதில் வேண்டுமானாலும் கொண்டுவரலாம் .அது ஒரு செயலுக்கு மட்டும் உரித்தது அல்ல .
பெரும்பாலான மக்கள் ,கிழக்கு பக்கம் உட்கார்ந்துக்கொண்டு தீயை மூட்டி சில மந்திரங்களை முனுமுனுப்பது அல்லது இதை போல சில சடங்ககுகளை குறித்த நேரத்தில் ஒரு முறை படுத்திய செயலாக செய்வது தான் தியானம் என்று கருதி வருகிறார்கள் .
உண்மையான தியான தன்மைக்கும் இவைபோன்ற சடங்குகளுக்கும்எந்த சம்மந்தமும் இல்லை,இவையெல்லாம் நீங்கள் இயந்திர தனமாக செயல் படுவதற்கே உதவும் .
ஆனால் தியானம் இயந்திர தனமான செயல்களுக்கு முற்றிலும் எதிரி .நீங்கள் உங்கள் செயலில் முழு பிரைஞை உடன் அதாவது செயலும் மனமும் கலந்து ஒன்றி இருந்தால் அதுவே தியானம் .அந்த செயல் எதுவாக இருந்தாலும் கவலை கிடையாது .இப்படி நீங்கள் இடுபா ட்டுடன் எதையும் செய்தால் அது தான் தியானம்.
-ஓஷோ
No comments:
Post a Comment