அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் ஈடுபடும் போது தியான த்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குரு உபதேசம் பெற்றவர்கள் உபதேசம் பெற்றுக் கொண்ட பிற கும் தியானத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபட்டி ருந்தாலும் தியானம், மௌனம், அர்ச்சனை, அபிடேகம் ஆகியவை தேவை.
ஆன்மிகத்தில் அமைதி தேவை. தியானம் பழகப் பழக மன அமைதியேற்படும்.
மேல் மருவத்தூர் மண்ணில் 108 முறை அமர்ந்து தியானம் செய்தவர்களை ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது.
தியானம் நிதானத்திற்கு வழி வகு க்கும்.
தியானம் இருக்கும் போது இடுப்பு வலி, விலா வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலிய ஏற்படும்.படிப்படியாக 10,20,30,40 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொண்டே வர வேண் டும்.அதன் பின் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப டும். இந்தத் தடைகளையெல்லாம் கடந்து தான் நீங்கள்
முன் னேறி வரவேண்டும். பிற கு கட்டுப்பாட்டுடன் 40 நிமிடங் களிலிருந்து மூன் று மணி நேரம் வரை பொ றுமையாகத் தியானம் இருந்தால் நீங்கள் கால் பங்கு ஆன்மிக முன்னேற் றம் அடையலாம்.
மூக்கு, காது, வாய் எனும் மூன்றையும் அடக்கித் தி யானப் பயிற்சி செய்வ தா ல் மூன்று ஆபாசங்களும், மூன்று குணங்களும், ஜம்புலக் கட்டு ப்பாடும் ஏற்படும். மூன்று குணங்களும் முக்கோண வடிவ மாகும். தியானம், மௌனம் கடைப்பிடிப்பதால் அவை கட்டுப் படுகின்றன.மனக் கட்டுப்பாடு இல்லாததால் சில வார்த்தை கள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடுகின்றன.
உடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தருவதற்காகவே தியானம். தியானம் செய்வதனால் சகிப்புத் தன்மை, பண்பு, கட்டுப்பாடு
உண்டாகும்.
செவ்வாடை அணிந்து கொண்டு உள்ளத்தில் அழுக்கு இருக்கக் கூடா து. உள்ளத்து அழுக்கை போக்கிக் கொள்வதற் கு தியானம் அவசியம் .
கிரகணத்தின்போது நீங் கள் தியானத்தில் அமர் ந்தால் பல ஆக்க வி ளைவு, பக்தி உணர்வு, மந்த புத்தி நீங்குதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.
மருவத்தூர் வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று
நிமிட நேரம் தியானம் செய்து விட்டுச் செல்.
கண்களை திறந்து வைத்துக் கொண்டுதான் வெளியுலகத் தை பார்க்க முடியும் என்பதில் லை. தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்.
தியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள் துரோகங்கள் உங்கள்முன் வரு கின்றன. அவற்றை அப்படியே விடு! பின்னால் அந்த எண்ண ங்கள் மாறும்.
மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மந்திரங்களை படிப்பதைக் காட்டிலும் இருட்டறையில் இருந்துகொண்டு தியானம் செய்வது சிறப்பு.
அறுகோணம் போல் கால்களை வைத்துக்கொண்டு சின் முத்தி ரையுடன் தியானம் செய்ய வே ண்டும்.
தீ யானம் இருண்டும் கொண்ட து தியானம் ஆகும். தீ என்பது தீ ய பழக்கங்களை குறிக்கும். யா னம் என்பது பாத்திரங்களைக் குறிக்கும். உன் மனம் தான் அந் தப் பாத்திரம். உன் மனம் என்ற பாத்திரத்தில் உள்ள அழுக்கு களை வெளியேற்றி நீ தெய்வ நிலைக்கு உயர வேண் டும் என்பதற்காகவே தியானம்!
எப்போதெல்லாம் உன்மனம் குழம்புகிறதோ அப்போதெல் லா ம் ஒரு பத்து நிமிடம் மௌனமும் தியானமும் மேற் கொள்.
எவ்வளவுதான் ஓடியாடி அலைந்தாலும் சில நிமிட நேர மாவது தனிமையில் அமர்ந்து தியானம் பழகு. தியானத்தில் இரு.
தியானம் தான் மனக்கட்டுப் பாட்டிற்கு வழி!
தியானம் தான் எல்லாவற்றிற்கும் சிறந்தது!
தியானம் தான் ஒருவன் வளர்ச்சிக்கு அடையாளம்!
தியானம் தான் எல்லாவற்றிலும் மேலான பொருள்!
தியானம் தான் நிதானத்தைக் கொடுக்கும்!
தியானத்தால் எல்லாவற்றையும் அடையலாம்
No comments:
Post a Comment