Pages

sai yoga centre

sai yoga centre

Sunday, November 6, 2011

சிந்தனை

சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.


சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

சிந்தனை செய் மனமே


சிந்தனை ஒரு வரம். அடிக்க அடிக்க அம்மி நகரும், தட்டத் தட்டச் சிலை வடிவம் பெரும். அதே போல் சிந்தனையால் உங்கள் மூளையைக் குடையக் குடைய அறிவு வளரும், ஞானம் பிறக்கும். தினம் ஒரு 15 முதல் 30 நிமிடம் நாம் சிந்திப்பதற்காக ஒதுக்கினால், நம் ஞானம் விருத்தியாகும். மூளையை உபயோகிக்காமல் விடும் பொழுதுதான், மறதி பெருகுகிறது. ஆய்வுகள் சொல்கின்றன, நாம் நம் மூளையின் திறனில் வெறும் 10 விழுக்காடு தான் பயன்படுத்துகிறோமாம். மிச்சம்.... சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.

வேலைகளுக்கு நடுவே நாம் ஏதாவது எண்ணிக்கொண்டேதான் இருப்போம். அவை எண்ணங்கள். நான் சொல்வது, ஓய்வாக அமர்ந்து நமக்கு நாமேமனத்துக்குள் விவாதம் நடத்துவது; 'சிந்தனை'. எதைப் பற்றியாவது கேள்வி கேட்டு, உங்கள் மூளையைக் குடையுங்கள். நீங்களே வியக்கும் வண்ணம், பல புதிய விஷயங்கள், சிந்தனைகள் உங்கள் கபாலத்தை நிரப்பும். ஏதோ ஓர் அலைவரிசை உங்களுக்குள் புதிதாய் பிறக்கும்.

சிந்தித்ததால் அசோகன் மனிதம் காத்தான், சித்தார்த்தன் புத்தன் ஆனான். சிந்தித்ததால் யானை முகன் ஞானப் பழம் வென்றான். சிந்தனை ஞானம் கொடுக்கும் சரி... அதை வைத்துக்கொண்டு 'புளியங்காய்' கூட வாங்க இயலாது... ஆமாம்! ஆமாம்.... வாங்க முடியாது.... உற்பத்தி செய்யலாம்...! சிந்தனை வேறு என்ன தரும்? அது உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். வழக்கமான முறையில் அல்லாமல், புதிய வழியில் செயலாற்றி, மற்றவரை வியப்பில் ஆழ்த்துவீர்.

ஒரு துணுக்கு:

ஒரு அலுவலகத்தில் வேலைக்கான ஒரு நேர்காணலில், மேலாளர் கேட்கிறார் - "what is before you?"
ஒருவன் சொன்னான் - காபி
மற்றொருவன் சொன்னான் - காபி
மூன்றாமவன் சொன்னான் - டீ

எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் காபி தானே பரிமாரப்பட்டது. வியப்பாக, 'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். எப்படி?

ஆங்கில எழுத்து வரிசையான 'a,b,c,d' யில் 'U' விற்கு முன் 'T' தானே!!!!

இந்தச் சாதுர்யம், பக்குவம், யோசனையெல்லாம், நீங்கள் அன்றாடம் சிறந்த புத்தகங்களை, கருத்துகளை, நிகழ்வுகளை படித்துத் தெரிந்து, கேட்டு, பின்பு நன்கு ஆய்ந்து உங்கள் கபாலத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது தட்டித் திறந்துகொள்ளலாம்.

சிந்தனை நம்மை மனிதன் ஆக்குகிறது. செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவுகிறது, வெற்றிக்கு வழிவகுக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருங்கள். சதா சிந்தித்தால் பைத்தியமாகி விடுவோம் என்பார்கள். பரவாயில்லை என்கிறேன் நான். பித்தம், ஞானத்தின் உச்சம்.. அது ஒரு பரவச நிலை.. நான் முழுப் பைத்தியம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்..!

சுதந்திர சிந்தனை

சிந்தித்தல், யோசித்தல் போன்ற வார்த்தைகள் நம்மால் தினசரி பயன்படுத்தப்படுபவையே. நமது சிந்தனைகள் எப்படி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் தெரியுமா? (சிலரைத் தவிர) அதிகமானவர்கள் ஒரு சிறைக்குள் மட்டுமே சிந்திப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு விஷயம் குறித்து விவாதிக்க கூறினால் ஒவ்வொரு வரும் தனது கருத்துக்களைக் கூறுவார்கள். பெரும்பாலும் அவர்களது கருத்து, அவர்களின் சிந்தனைப் போக்கினை ஒட்டியே வந்து விழும்.
சிந்தித்தல் என்பது மனதின் கருவி எனக் கூறலாம். மனது எந்த கருத்தையும் தனது போக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளும் இயல்புடையது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைப் பார்த்து அதில் உங்களுக்கு என்னென்ன தோன்றுகிறது என்பதை ஒரு பட்டியல் எழுதிக்கொள்ளுங்கள்.
இப்படத்தினை உங்கள் நண்பரிடமோ (அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்) காண்பித்து அவர்களுக்கு படத்தினைப் பார்த்தால் என்னத் தோன்றுகிறது என்பதைக் கேளுங்கள். அவர்களும் சில பொருள்கள், விஷயங்களைக் கூறுவார்கள். அதை கவனித்தீர்களேயானால், அவைகள் அந்த நபர்கள் சம்பந்தபட்டவையாகவே இருக்கும். நீங்கள் எழுதிய பட்டியலுக்கும் அவர் கூறியதற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம்.
இந்த படத்தினை சில குழந்தைகளிடம் காட்டி அவர்களிடம் என்ன தெரிகிறது என்பதைக் கேட்டுப்பாருங்கள். குழந்தைகளின் பட்டியல்கள், பட்டாம்பூச்சி, மரம், பறவை, பூச்சிகள், மேகம், பட்டம் ன்உ அழகான ரசனைமிக்க, இயற்கை சார்ந்த விஷயங்களாக இருக்கும். குழந்தைகளுகு இவ்வாறு கருத்துகள் தோன்றக் காரணம் அவர்களின் சிந்தனை சுதந்திரமாக, ரசனை மிக்கதாக உள்ளது.
மாறாகப் பெரியவர்களின் சிந்தனைகள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற இயலாத காற்று போல இருப்பதால் கருத்துக்களும் அவ்வாறே அவர்கள் சம்பந்தப்பட்டவையாக மட்டுமே இருக்கிறது.

பிரபல உளவியல் பரிசோதனைகளும் இது போல உண்டு, அதை (Ink Plot Test) டெஸ்ட் என்பர். ஒரு முறை கவுன்சிலிங் வந்திருந்த இளைஞரிடம் இதைப் போன்ற படத்தினைக் காட்டியபோது அவர் கூறிய ஒரு விஷயம் லவ் பேர்ட்ஸ் போல தெரிகிறது என்று கூறினார். (அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதற்கான வயதில் இருந்தார்.). ஓர் குடும்பத் தலைவி இதை ஒரு குத்துவிளக்கு என்றும், ஆன்மிகவாதி ஒருவர் இது திரிசூலம் என்றும் குறிப்பிட்டார்கள். சபரிமலைக்கு போவாரிடம் காட்டினால் பதினெட்டு படிகள் தெரிகிறது என்று கூடக்கூறலாம்.
சரி, இது போன்ற சிறைக்கூடச்சிந்தனைகளிலிருந்து எவ்வாறு வெளியேறுவது?
சிந்தித்தல் என்பது கூட நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயமாகத்தான் சில உளவியளார்கள் கருதுகிறார்கள். ஆகவே ஒரு விஷயத்தை பலவாறு யோசிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பலவற்றைக் கூர்ந்து கவனித்தல், படித்தல், ஒரு நிகழ்வு நடந்து விட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திப்பதைப் போலவே, நடக்காவிட்டால் எப்படி இருக்கும், அந்த நிகழ்வு நல்லபடியே, சிறப்பாக நடந்தேற என்னென்ன செய்யலாம் என்பதை சிந்தித்தால் நீங்கள் சிந்தித்தலில் விடுதலை பெறத் துவங்கிவிட்டீர்கள் எனக் கூற இயலும்.

ஒரு விஷயத்தைக் குறித்த பலரிடம் கருத்துகளைக் கேட்டுப் பெறுதல், அவ்விஷயத்தில் எதிர்கால மாற்றம் எப்படி இருக்கும் போன்றவை சிந்தித்தலில் சிகரத்தை தொடவைக்கும்.

No comments:

Post a Comment