இலட்சியக் கனவுகள் மலரட்டும் – அவை
செய்யும் பணியில் மணக்கட்டும்
புதிய முயற்சிகள் தொடரட்டும் – அவை
புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்
பணி என்பது உங்களுடைய வாழ்வின் மைய அச்சு என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். பணியில் நீங்கள் காட்டுகின்ற ஈடுபாடே உங்களுடைய வாழ்வில் வெற்றிக்கு அடிப்படையான அம்சமாகும். வாழ்வில் வெற்றியடைவதற்கு முதலில் நீங்கள் செய்யும் பணி எதுவாயிறும் அதை முழுமன ஈடுபாட்டுடன் நேசிக்கத் தொடங்குங்கள். அத்துடன் நீங்கள் செய்யும் பணியை இன்னும் செம்மையாகச் செய்தற்குத் தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். தொடர் முயற்சியே தொடர்ச்சியான வெற்றியைக் கொடுக்கும். ஆகவே எப்பொழுதும் முயற்சிச் சிறகுகளை மென்மேலும் உயர்த்திக் கொண்டு இருக்கின்றது. அதுபோல புதுப்புது முயற்சிகள உங்களது வாழ்வை உயர்த்தும் வல்லமை வாய்ந்தவை என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். வளர்ச்சியே வாழ்வின் தத்துவம்.
முடியாது என்பது கிடையாது
புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது, இடையூறுகளும் பிரச்சனைகளும் எதிரில் வரலாம். அதற்காக மனம் தளர்ந்து விடாமல் தொட்ரந்து முயல்வதற்கு தன்னம்பிக்கையுடன் கூட உத்வேகத்தை உங்களுடைய சொத்தாக்கிக் கொள்ளுங்கள். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரும் கூட்டாகவும் ஒத்த மனதுடனும் நிறுவனத்தின் இலக்க நோகி உழைக்கும்போது, முடியது என்பது கிடையாது. தொழில் உலகில்நிலவும் போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் வேட்கை உடன் நீங்கள் செயல்படத் தொடங்குங்கள். மேலும் முயற்சிக்கும் பழக்கமே உங்களுடய முதற்பணமாகத் திகழட்டும். அத்துடன் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும் விதத்தில் காலச் சூழலையும் குத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி உங்கள் விலாசமாகும்.
தன்னம்பிக்கை வேண்டும்
பணிவாழ்கையில் வெற்றி பெறுவதற்கு சுயகட்டுப்பாடு இன்றிமையாத பண்பாகும். எதையும் திட்டமிட்டுச் செய்து பழகுவதுடன், திட்டமிட்டவாறே அவற்றை செய்யும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்பாடுகளை உங்களுடைய மேலதிகாரிகள் கண்காணித்து சரி செய்யட்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. நீங்களே தன்முனைப்போடும் சுயகட்டுப்பாடுடனும் சரியாகச் செயல்படுவதே சிறந்த நண்பாகும். ஆகவே உங்களுடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலக் கனவுகள் நனவுகளாக மலர்வதற்கு, உங்களுடைய ண்புகளே அடிப்டையாகும். நல்ல பணிப்பண்புகள் ஏற்படுவதற்கு, சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கத் தொடங்குங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும், உடன் பணிபுரிவோரை அனுசரித்து பணிபுரிவதற்கும் நற்சிந்தனையுடன் கூடிய தெளிந்த மனம் வேண்டும். அவ்வாறு தெளிந்த சிந்தனையோடு நீங்கள் எடுக்கும் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற்று உறுதி.
உங்கள் பணி முக்கியமானது
நீங்கள் என்ன வேலை செய்கின்றீர்கள் என்பதை விட அதை எவ்வாறு செய்கின்றீர்கள் என்பதே மிகவும் முக்கியமானது. ஆகவே நீங்கள் செய்கின்ற பணி முக்கியமானது என்று முதலில் நீங்கள் எண்ணத் தொடங்குங்கள். அப்பொழுதுதான் அப்பணியை சிறப்பாக செய்வதற்கான அவசியத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் சின்ன சின்ன பொறுப்புகளைச் சிறப்பாக முடிக்கும் போதுதான் பெரிய பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றம் போதுதான் நீங்கள் முக்கியமானவராக உயர்கின்றீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் அழகுடனும் சிறப்பாகவும் செய்யும் பண்புடையவராகத் திகழ முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் பணி எதுவாயினும் அதில் முக்கியமானவராக திகழ சில யோசனைகளை மனதில் கொள்ளுங்கள்.
1. சரியான கோணத்தில் சிந்திக்கத் தொடங்குங்கள்.
2. வழக்கமான பணி என்றாலும் அதில் புதிய நடைமுறையைக் கண்டுபிடியுங்கள்.
3. எப்பொழுதும் புத்துணர்வுடன் பணியைச் செய்யுங்கள்.
4. உயர்ந்த இலட்சியக் கனவு காணுங்கள்.
சரியான சிந்தனை
எதையும் நேர்முகச் சிந்தனையுடன் அணுகுங்கள். அதாவது ‘இது முடியாது’ அது முடியாது” ‘அது அப்படிப்பட்டது ‘இது இப்படிப்பட்டது’ என்பது போன்ற எதிர்மறை மனதுடன் சவால்களைஎதிர்கொள்ளாமல், “முயற்சித்தால் நிச்சயம் முடியும்” என்ற தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்க வேண்டும். மேலும் உங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு மீதும் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு பழகுங்கள். அனைவரும் நல்லவர்களே என்ற எண்ணத்தோடும் பாருங்கள். அன்பும் அக்கறையும் கொண்டு பழகுங்கள். அனைவரும் நல்லவர்களே என்ற எண்ணத்தோடு பாருங்கள். அத்துடன் அவர்களும் உங்களைப்போலவே திறமையும் அறிவும் மிக்கவர்கள் என்று கருதுங்கள். ஆம், இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையும் சிறப்பியல்புகளும் இருக்கும். அதை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கு உதவுங்கள். அப்பொழுதுதான் அனைவருக்கும் உங்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.
புதிய நடைமுறை
வழக்கமான வேலைகளையும் சற்று வித்தியாசமாகவும் முன்னேற்றமாகவும் செய்ய எண்ணுங்கள். மாற்றமே முன்னேற்றத்திற்கு முதல்படி. என்றாலும் எல்லா மாற்றமும் முன்னேற்றமாகாகது. ஆகவே எதையும் விழிப்புணர்வோடும், மேலதிகாரிகளின் ஒப்புதலோடும் செய்ய வேண்டும். புதிய புதிய உத்திகளையும் நுணுக்கங்களையும் கையாண்டு, உற்பத்திச் செலவையும் பொருட்கள் விரயத்தையும், எரிசக்தி செலவையும் குறைக்க முயலுங்கள். உங்களுடைய பணியில் அழகுணர்வு மிளிர வேண்டும். மற்றவர்கள் பார்த்துப் பாராட்டும் படியாக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உங்களுடைய செயல்கள் உங்களுக்கு உள்ள அறிவை மட்டும் வெளிபடுத்துவதில்லை, உங்களுடைய மனநிலையையும் தான் வெளிப்படுத்துகின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
புத்துணர்வு கொள்ளுங்கள்
செய்யும் பணியில் ஈடுபாடும் அக்கறையும் இருக்குமாயின் உள்ளத்தில் புத்துணர்வும் முகத்தில் மகிழ்ச்சியும் தவழும். மேலும் பணியை செய்யும்போது, வெறுப்பற்ற மனநிலையில் செய்ய வேண்டும். அதாவது எக்காரணம் கொண்டும் செய்யும் பணியை சலிப்புடனும் வெறுப்புடனும் செய்யக்கூடாது. அதை உணர்த்தத்தான் “செய்யும் தொழிலே தெய்வம்; திறமையே நமது செல்வம்” என்று கூறியுள்ளார்கள் நமது முன்னோர்கள். மனமகிழ்ச்சியோடு பணி செய்யப் பழகிக் கொள்ளுங்கள். பணியை நிறைவாகச் செய்வதற்கு அதன் மீது அக்கறையும் ஈடுபாடும் வேண்டும். ஆகவே எப்பொழுதும் புத்துணர்வோடும் பணி செய்வதற்கு ஏதுவாக உடல் நிலையையும் மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
உடலை ஆரோக்கியமாகவும் செய்யும் பணிக்கு பொருத்தமாகவும் வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான உடற்பயிற்சியும், மனநிலையை அமைதியாகவும் சமமாகவும் வைத்துக் கொள்வதற்கு தியானம், யோகாசனம் போன்ற பயிற்சிகளையும் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்ல பழக்கங்களே வாழ்வை உயர்த்தும் தூண்கள்.
இலட்சியக் கனவு
உங்களுடைய குடும்ப வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் சாதனை புரிவதற்கும், தாய்த் திருநாட்டை மேம்படுத்துவதற்கும் இலட்சியக் கனவு காணுங்கள். இந்தத் திருநாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களுடைய பணியின் மூலம் உதவுவதற்காக இலட்சியக் கனவை நெஞ்சில் குடியேற்றுங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு துளியும் ஒன்றாகச் சேரும் போதுதான் பெருங்கடல் உருவாகின்றது. அதுபோல உங்களுடைய ஒவ்வொரு செயலும் திறமையாகவும் நேர்மையாகவும் முடிக்கும்போது, நீங்கள் செயல் திறன் மிக்க பணியாளராக பரிணமிகின்றீர்கள். அத்துடன், ஒவ்வொரு பணியாளரும் திறைமையும் சிறப்பும் மிக்கவராக ஆகும் போதுதான். ஒரு நிறுவனம் உயர்கின்றது. நிறுவனத்தின் வளர்ச்சியே தனிமனித வளர்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாகின்றது. தொழில்வளம் பெருகுவதற்கு தன்னம்பிக்கையுடன் கூடிய தளராக உழைப்பு வேண்டும். இதை நெஞ்சில் நிறுத்தி செயலாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment