Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, November 12, 2011

நலம் தரும் ரெய்கி........REIKI

நலம் தரும் ரெய்கி........REIKI
[Image: ReikiHandsOmm.jpg]
பண்டைக் காலத்தில் திபெத்தியர்கள் உடல் நலம் குன்றியவர்களைத் தன் கைகளால் தொட்டு அவர்கள் உடல் நிலையைச் சரியாக்கினர். அவர்கள் இதை "புத்தரின் மருந்து" (medicine of Buddha) என்று கூறினர். பல வியாதிகளை இவர்களால் போக்க முடிந்தது. பல வருடங்களுக்குப் பின் இந்த குணமளிக்கும் முறை மறைந்துவிட்டது. திரும்பவும் இந்தச் சிகிச்சையை வெளியே கொண்டு வந்தப் பெருமை டாக்டர் உஸியீ என்பரையே சாரும். இவர் 1800-ல் ஜப்பானில் கூயூட்டோ என்ற இடத்தில் ஒரு தொழிற்கூடப் பயிற்சியில், மனதைப் பற்றியும் உடலைப் பற்றியும் நடந்த விவாதத்தில் பங்கேற்று அதில் பல உண்மைகளைக் கண்டு பிடித்தார். அதில் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. சோகமுற்றால் உடல் வலி ஏற்படுவதோடு தலைவலி, உடல் வலி, இரத்த அழுத்தம் போன்றவை உண்டாகி, மேலும் உடல் தொய்ந்து போகிறது என்றும் தெரிந்து கொண்டார். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் இந்தியாவிற்கு வர ஆர்வம் கொண்டார். சித்தர்கள் நிரம்பிய நாடாயிற்றே! முதல் வேலையாக ஸம்ஸ்கிருதம் படித்து அதில் வெற்றி கண்டார்.

பின் உபநிஷத், வேதம் என்று எல்லாம் அலசிக் கடைசியாக இவருக்கு இதைப் பற்றி தெளிவு பிறந்தது. அவர் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் அநேக விதமான சக்திகள் மற்றும் குறியீடுகள் உள்ளன, உயிர்ச்சக்தி நிரம்பிக் கிடக்கிறது, அதனை நம் உடலில் கொணர்ந்து பல சாதனைகள் படைக்க முடியும் என்று உணர்ந்தார். அதை எப்படிச் செயல்படுத்துவதெனத் தெரியாமல் தவித்தார்.

ஒரு நாள் நடந்து வருகையில் ஒரு ஜென் புத்தபிட்சுவைக் கண்டார். அவரிடம் இதைப் பற்றிக் கூறினார். அவர் ஆலோசனையின்படி குராமயாமா என்ற மலைக்குப் போய் இருபத்தோரு நாட்கள் தியானத்தில் இருந்தார். உண்ணாவிரதமும் அனுஷ்டித்தார். ஆரம்பத்தில் ஒரு இருபத்தியோரு கூழாங்கற்கள் எடுத்து வந்து தினமும் விடிகாலையில் ஒரு கல்லை எடுத்து வீசிப்போட்டு பின் சூத்திரம் படிப்பார். இதேபோல் இருபது நாட்கள் கழிந்தன. முடிவில் ஒரு விதமான விடையும் கிடைக்காமல் மனமொடிந்து அந்த இயற்கைச் சக்தியிடம் கெஞ்சினார். பல தடவை முறையிட்டார். பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும் ரகசியங்களை அறியத் துடித்தார். கடைசிக் கல் பாக்கி இருந்தது. அந்த நாளும் வீணாகிவிட்டால் அந்த மலையிலிருந்து விழுந்து விட எண்ணினார். அப்போது ஒரு வியக்கத்தக்கச் சம்பவம் நடந்தது. கண்ணைப் பறிக்கும் ஒளி அவரை நோக்கி வந்ததைக் கண்டார். அருகில் வர வர அது பெரிதானது. பயந்து ஓடிப் போக நினைத்தார். ஆனால் அந்த ஒளி அவர் தலையில் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அவ்வளவுதான். அவர் மயக்கமடைந்தார். உள்ளே ஒரு குரல் பேசியதை உணர்ந்தார்."உடலை ஆரோக்கியமாக்கும் சாவிகள் இப்போது உன்னிடம் வந்து விட்டன. நன்கு கவனமாகப் பார்த்துக்கொள். இதை மறைய விடாதே"

கண் விழித்தபோது தான் இறந்து விட்டதாகவே நினைத்தார். "ஒ நான் இறக்கவில்லை. ஒளி உள்ளே நுழைந்த வேகம் தாங்காமல் கீழே மயங்கி விட்டேன். இன்னும் நிறைய சாதனை செய்யவேண்டும்” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டார். தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். பின் அந்தக் கூழாங்கற்கள் இறைந்த இடத்திற்குப் போனார். என்ன ஆச்சரியம்! அங்கு பலவிதமான வண்ணங்களில் சின்னச் சின்னக் காற்றுக் குமிழிகள் கோடிக் கணக்கில் தோன்றின. பல வண்ண வட்டங்கள் தோன்றின. அதன் நடுவில் ஸமஸ்கிருத மொழியில் தங்கத்தில் எழுத்துக்கள் இருந்தன. "வெற்றி! வெற்றி! என் தேடலுக்கு விடை கிடைத்து விட்டது. என் இலட்சியம் நிறைவேறியது. நன்றி இறைவா! நன்றி இறைவா" என்று குதி குதியென்று குதித்தார். மகிழ்ச்சியால் நடனம் ஆடினார். பின் நடந்து மலையிலிருந்து கீழே இறங்கினார். மலை உச்சியிலிருந்து வேகமாக கீழே சரிந்து வந்தார். கீழே வரும் வரை ஒரு இடத்திலும் நிற்கவில்லை. கீழே வந்து நின்றவுடன் அவருக்கு ஒருவிதமான களைப்பும் இல்லை. உடலில் ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்பட்டது.

ஓடிவரும் போது ஒரு கல் குத்தி காலில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இரத்தம் துடைக்கத் தன் கையை அந்த இடத்தில் வைத்தார், உடனே அந்த இடத்தில் இரத்தம் வழிவது நின்று விட்டது. வலி அறவே இல்லை. அன்றைய தினத்திலிருந்து பல ஆச்சரியமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அவர் கை வைத்த இடமெல்லாம் தூய்மை அடைந்தன. பசி எடுக்க ஆரம்பித்தது. அதை மனதில் நினைக்க ஆரம்பித்த உடனே அருகில் சிவப்புக் கம்பளம் விரித்து ஒரு உணவு விடுதி தென்பட்டது. நிறைய உணவு வகைகள் [/size]ங்கு இருந்தன. அதில் நல்ல காரமான உணவையும் அவரால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் சாப்பிட முடிந்தது. எல்லாம் ஜீரணமும் ஆனது. அங்கு சமைத்த பெண் பலவலியினால் சிரமப்பட்டாள். இவர் தன் கையை வலி இருந்த இடத்தில் வைத்ததும் அவளுக்கு வலியும் மாயமாய் மறைந்தது. இதே போல் பல நோயாளிகளைத் தன் தொடு சிகிச்சையினால் குணமாக்கினார்.

டாக்டர் உஸியீ ரெய்கியின் கொள்கைகளும் தத்துவங்களும் கொண்ட ஒரு புத்தகம் எழுதினார். அப்போது ஒவ்வொரு சக்ராவிற்குத் தேவையான குறியீடுகள் அவர் கண்முன் தோன்றின. அதை மனதில் வைத்துக் கொண்டு ரேக்கி கிளினிக் ஒன்றை டோக்கியோவில் ஸ்தாபித்தார். அவருக்குப் பின் அவரது சீடர்கள் இந்த சிகிச்சை முறையைப் பல நாடுகளிலும் பரப்பினர்

இந்த ரெய்கியின் சக்தியினால் பல உடல் உபாதைகளும் மன நோய்களும் குணமாகின்றன. தொலைவில் இருப்பவர்களுக்கும் தூர சிகிச்சை (distance healing) முறையின் மூலம் பயனடையலாம்

No comments:

Post a Comment