உடலினை உறுதிசெய்
ஆழ்ந்த தியானத்தில் மனது
ஒழுகும் எண்ணெயைப் போல
தொடர்ந்து ஒருநிலையில் இருக்கும்.
-பதஞ்சலி முனிவர்
உடல்நலமா, மனநலமா, சமூக நலமா என்று கேட்டால் , சிலர், எதுவும் வேண்டாம் மனநிம்மதிதான் வேண்டும் என்கிறார்கள். எந்த இன்பமும் வேண்டாம் .மனஅமைதிதான் வேண்டும் என்பதுதான் இவர்களது வேண்டுகோள். PEACE OF MIND. நிம்மதி என்பது சுகத்தை அனுபவிக்கும் ஒரு நிலை அல்ல. துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கும் ஒரு நிலை. துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்தா லொழிய நிம்மதி அடைய முடியாது.
வாழ்வில் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கும் நபர்கள் மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. கடன்பட்டவர்கள், குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் , படித்தும் வேலை கிடைக்காதவர் கள், படிக்காமல் ஊர் சுற்றித் திரியும் இளைஞர் கள், நிரந்தர நோயாளிகள், தினமும் சண்டை யிடும் பெற்றோரின் குழந்தைகள், இப்படி வாழ்வில் நிம்மதி இழந்தவர்கள் பலரையும் பார்க் கிறோம். நாமும் கூட வாழ்வில் அதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில சம்பவங்கள் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன. பலர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றனர். சிலர் அப்படி மீளமுடியாமல் நீண்ட காலம் நிம்மதி இழந்து குடிப்பழக்கத் திற்கும் அடிமையாகிறார்கள். பின்னர் அதன் மூலம் உடல்நலமும், மனநலமும் கெட்டு வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.
நிம்மதியும் மன அமைதியும் உள்ளவர்கள் தான் ஊட்டச்சத்து உணவு உண்டு உடல்நலம் பேண முடியும். அவர்களால்தான் நல்ல எண்ணங் களும், நல்ல நடத்தையும் உள்ளவர்களாக இருக்க முடியும். நிம்மதி இழந்தவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில் தெரியும். முகத்தின் தோற்றம் அவரது வயதை அதிகரித்துக் காட்டும். உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடியாது. சொல்லும், செயலும் இவர் தோல்வியடைந்தவர் என்பதைக் காட்டிவிடும்.
கவலைகளை விட்டொழியுங்கள்
மன நிம்மதி இழந்தவர்கள் கவலைப்படு வார்கள். தங்களது தோல்விக்குத் தன்னையும், மற்றவர்களையும் குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள். முற்காலங்களில் செய்யத் தவறிய காரியங்களை அல்லது செய்துவிட்ட காரியங் களைப் பற்றியே வருந்திக் கொண்டிருப்பார்கள். கவலைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் கவலைப்படுவதால் என்ன பயன் என்பதாகும். நாம் ஒரு பிரச்சனையைச் சாமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவேளை அந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாது என்றால் அப்பிரச்சனையைக் குறித்த கவலைப்பட்டு என்ன பயன்? ஆக பிரச்சனையை சாமளிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் கவலை என்பது தேவையற்ற ஒன்று. அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.
அதற்காக ஒரு பிரச்சினை என்று வந்த வுடன், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்து விட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. பிரச்சனை என்றதும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று இந்தப் பிரச்சினையால் அதிகபட்சம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பாதிப்பை சந்திக்க மனதளவில் தயாராக வேண்டும் பெரும்பாலும் அப்படி ஒரு பாதிப்பு வராமல் கூட போய் விடும் இரண்டாவது , அதனைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. ஓய்வு பெறும் தருவாயில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு அல்லல்படுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒருவன் 58 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும் என்றிருந் தால், 57 வயதில் கவலைப்பட்டு என்ன பயன்? பணி ஓய்வு வந்தே தீரும். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஏதாவது அவசர வேலையாக வெளியே கிளம்புகிறோம், அப்போது மழை வருகிறது அதைத் தடுத்து நிறுத்திவிட்டு செல்லலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஏனென்றால் மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே மழை பெய்யட்டும் , பெய்து முடியட்டும் என்று காத்திருந்து பிறகு கிளம்புகிறோம். நம்மை மீறி வருவதை ஏற்றுக் கொள்வோம். Accept the inevitable
எப்போதுமே மன அமைதியைப் பரா மரிக்க மிகச் சிறந்த வழி தியானமாகும். இதன் முக்கியத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்துத் துறவிகளும், புத்தமதத் துறவிகளும் நன்கு புரிந்துள்ளனர். திருவள்ளுவர் தவம் என்னும் தலைப்பில் தனி அதிகாரத்தைப் படைத்துள்ளார். இந்தியாவில் புத்த மதம் தோன்றியிருந்தாலும், ஜப்பானில் தான் தியானத்திற்கு என்று அரசர்கள் கோயில்களைக் கட்டியுள்ளனர். இத்தகு சென் கோயில்கள் (Zen Temples) என்று பெயர். இந்தத் தியானக் கோவில்கள் ஜப்பானில் ஏராளமாக உள்ளன. நல்ல சிந்தனை, நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, மற்றும் நல்ல தியானம் ஆகிய எட்டுவழிப் பாதையைப் போதித்தார் புத்தர். இந்து மதத்தில் சாமி கும்பிடுவதும், தவம் செய்வதும் தியானங் களே. நவீன காலத்தில் பலர் கடமைக்காக வேக வேகமாக கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து அவரச அவசரமாக வீட்டிற்கு வந்திருந் தாலும், சாமி தரிசனத்தின் நோக்கம் தியானம் தான். சிலர் தியானத்தின் அருமையை உணர்ந்து கோயில்களில் இருக்கும் 15 நிமிடங்களும் முழு நேரமும் கடவுள் நினைப்பாக இருப்பார்கள். இதுவே தியானம். கிறிஸ்தவ மனத்தினர் கூட ஜெபம் செய்கிறார்கள். 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்யப்படும் ஜெபத்தை கேட்பவர்கள் அந்தப் பேச்சையே கேட்டு மனதை ஒருநிலைப் படுத்துவார்கள். மனதை வேறெங்கும் அலையவிடுவதில்லை. இதுவே தியானமாகும். இஸ்லாமியர்களும் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முழங்காலிட்டு தலையைத் தரையில் தொட்டுச் செய்யும் தொழுகையுடன் சொல்லும் மந்திரம் ஒரு நல்ல தியானம் ஆகும். தியானம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக தியானத்தால் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் அதிகரிக்கின்றது. முழுக்கவனத்தையும் ஒரே பொருளில் அல்லது ஓசையில் செலுத்துவதால் ஒருநிலைப்படுத்தும் சக்தி (Concentration Power)அதிக மாகிறது. மாணவர்களுக்குப் பாடங்களை மனதில் பதிய வைக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது.
இரண்டாவது தியானத்தால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. எனவேதான், காரத்தே வீரர் களும், செஸ் விளையாட்டு வீரர்களும் தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
மூன்றாவது, தியானத்தால் நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. முதலியே சொன்னது போல உணவை முழுக்கவனத்துடன் சாப்பிட்டால், இதுவரை எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து அத்துடன் முடித்துக் கொள்ள முடிகிறது.
நான்காவது, தியானம் செய்யும் போது நாம் அமைதியாக இருப்பதால், நமது மனதினுள் இருக்கும் இன்பத்தையும், சமாதானத்தையும், தேவையையும் உணரமுடிகிறது.
ஐந்தாவது, தியானம் நாம் யார் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்தும். நாம் நம் மீது கவனம் செலுத்தி நம்மைப் பற்றிச் சிந்திக்காத வரையில் நம்முடைய திறமைகளைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும் போதும் நாம் நம்மோடு பேசும் போதும், நாம் யார்? நமது திறமைகள் என்ன? நமது சாதனைகள் என்ன? தோல்விகள் என்ன? என்ற யதார்த்தம் நமக்குப் புலப்படும். நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொண்ட அறிவுதான் மற்ற எல்லா அறிவையும் விட சிறந்ததுSelf Knowledge is the best Knowledge
“உன்னை நீ அறிவாய்” (Know Thyself) என்றார் கிரேக்க அறிஞர் சாக்கரட்டீஸ். நம்மைப் பற்றிய அறிவை உணர்த்த தியானம் வழி வகுக்கிறது.
ஆறாவது தியானம் நம்மை நிகழ்காலத் தில் வைத்திருக்கும். இறந்த காலத்தைப் பற்றி நினைப்பதில் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலத்தில் வாழ்வது என்பது ஒரு பகல்கனவு. நிகழ்காலத்தில் வாழ்ந்தால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வெற்றிகரமாக வாழ முடியும். அப்படி நிகழ்காலத்தில் வெற்றிநடை போடுபவர்களுக்கு இறந்த காலமும் வெற்றிச் சரித்திரமாக இருக்கும். எதிர்காலமும் ஒளி மயமாக இருக்கும்.
எப்படித் தியானம் செய்வது?
தியானம் செய்ய பல முறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பொருத்தமாக இருக்கும். ஒரு அமைதியான இடத்தில் முழங் கால்களை மடித்து பாதங்கள் மேல் அமர வேண்டும். இதை வஜ்ராசனம் என்பார். நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, முதுகை நேராக வைத்து, கண்களை 90 டிகிரி நேராக முன்னால் பார்க்க வேண்டும். பின்னர், கண்களை மூடிக் கொண்டு ஒரே வார்த்தையையே திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும்.
இந்து என்றால் ‘ஓம்’
முஸ்ஸீம் என்றால் ‘அல்லா’
கிறிஸ்தவர் என்றால் ‘இயேசுவே’
ஆனால், அந்த 5 நிமிடங்களும் மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடுத்திய உடை, சென்ற வாரம் பார்த்த சினிமா, எப்போதோ கேட்ட பாட்டு, எதிரிகளின் செயல்பாடுகள் போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனதை அப்படி அலைய விடாமல், நாம் சொல்லும் மந்திரத்தை மட்டும் காதில் வாங்கி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உங்களது கவனத்தை உங்கள் உடம்பில் பாய்ச்சுங்கள். உங்களது கவனம் முழுவதும் உங்களது காலின் பாதத்தில் கொண்டு வாருங்கள். உங்களது பாதங்கள் எப்படி இருக் கின்றன? நல்ல ஆராக்கியத்துடன் இருக்கின் றனவா? இப்போது உங்கள் கவனம் உங்களது முழங்காலில் வரட்டும். நன்றாக முழங்காலைப் பற்றிச் சிந்தியுங்கள், இப்போது உங்கள் கவனம் முட்டியில், இப்போது இடுப்புப் பகுதி. பின்னர் தோள் பகுதி.
இப்போது உங்களது முழுக்கவனமும் கழுத்துப் பகுதியில். கழுத்து நலமாக உள்ளதா? நலமாக இருக்கிறது. இப்போது உங்கள் கவனம் தலைக்கு வரட்டும். தலைப்பகுதி தெளிவாக உள்ளதா? ஆராக்கியமாக உள்ளதா ஆம்!
இப்போது உங்கள் சுவாசம் மீது கவனத்தைச் செலுத்துங்கள். நான் மெதுவாக சுவாசிக்கிறேனா? அல்லது வேகமாக, ஆழமாக சுவாசிக்கிறேனா?. மெதுவாக மூச்சை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுங்கள். நான்கு வினாடிகள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூச்சை மெதுவாக விடுங்கள். ஆனால், கவனம் சுவாசத்தில் மட்டும் இருக்க வேண்டும். மீண்டும் உங்களது முழுக் கவனமும் சுவாசத்தில் கொண்டு வாருங்கள், மூச்சை இழுங்கள். நான்கு வினாடிகள் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள் மனதில் மற்ற எண்ணங்களை நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள், மீண்டும் அதே வார்த்தைகள்,
ஓம் ஓம் ஓம்
அல்லா அல்லா அல்லா
இயேசுவே இயேசுவே இயேசுவே
இப்படி ஒவ்வொரு நாளும் 15 நிமிட நேரம் தியானத்தில் ஈடுபட்டால் போதும். தினமும் தியானம் செய்ய முடியவில்லை என்றால், வாரம் 3 நாட்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் செய்வதை விட வழக்கமாக செய்வது முக்கியமானதாகும்.
உடற்பயிற்சியோடு தியானம்
தினமும் முறையாக ஓர் இடத்தில் இருந்து கொண்டு தியானம் செய்வது சிறந்தது என்றாலும், தியானம் வேறு பல விதங்களிலும் செய்ய முடியும். நான் தினமும் காலையில் ஓடும்போது எனது வலது காலை நிலத்தில் பதிக்கும் போது 0, 1, 2, 3 என்று 100 வரை எண்ணி, பின்னர் 99, 98, 97 என்று கீழ்நோக்கி 0 வரை எண்ணுவேன். அடுத்தது இடது கால். இப்படியாக நான் தொடர்ந்து 10 நிமிடங்கள் வேறு எந்த எண்ணமும் மனதில் வராதபடி முழுக் கவனத்தையும் ஓடுவதிலும், எண்ணுவதிலும் ஈடுபடுத்துவேன். இதுவும் ஒருவகை தியானம் ஆகும். இதனை நீங்களும் பின்பற்றலாம்.
நான் எடைப்பயிற்சி (GYM) செய்யும் போது எனது முழுக்கவனத்தையும் எனது உடல் மீது செலுத்துவேன். பழுவினைத் தூக்கும் ஒவ்ù வாரு அசைவையும் எண்ணிக் கொண்டிருப்பேன். வேறு எங்கும் சிந்தனை போகாமல் கட்டுப் படுத்துவேன். இதுவும் ஒரு தியானம்தான்.
ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். என்னதான் கட்டுப்படுத்தினாலும், ஒரிரு நிமிடங் களுக்குப் பிறகு மனது வேறு சிந்தனைக்குச் சென்றுவிடுகிறது. இது இயற்கைதான். ஓடும் போது கூட ஐந்து நிமிடங்கள் உடலின் மீது இருந்த கவனம், வேறு எங்கோ செல்கிறது. அப்போது கூட சிந்தனைகளை ஆக்கப்பூர்வ மான காரியங்களில் ஈடுபடுத்தலாம். அடுத்த சில நாட்கள் செய்யவேண்டிய காரியங்களைக் கூட ஓடும்போது அல்லது நடக்கும்போது சிந்திக் கலாம். முடிவெடுக்காமல் நிலுவையிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு முடிவுகள் எடுக்கலாம். ஒரு பொருளைக் குறித்து ஆழ சிந்தித்து மனதிற்குள் விவாதம் நடத்தி நல்ல ஒரு முடிவு எடுப்பதும் ஒரு தியானம்தானே. மிக உன்னத மான பல சிந்தனைகள் உதயமானது காலையில் நடக்கும் போதுதான் என்கிறார் பெடரிக் நிவாட்சி என்ற அறிஞர்.
சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே உடற் பயிற்சி செய்கிறார்கள். ஒரு பாட்டைக் கேட்கும் ஐந்து நிமிடங்களும் முழுக்கவனத்தையும் அப் பாட்டிலேயே வைத்திருக்கலாம். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி பாட்டைக் கேட்பதும் ஒரு வகை தியானமே!
No comments:
Post a Comment