Pages

sai yoga centre

sai yoga centre

Sunday, March 24, 2013

தியான உதவிக்குறிப்புகள் - ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு 7 சிறந்த தியான உதவிக்குறிப்புகள்


தினந்தொறும் தியானம்

நீங்கள் காலையில் தியானம் செய்ய தவறினால் பரவாயில்லை, அதனால் உங்கள் நேரத்தை வளைந்து கொடுக்கவும், நீங்கள் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்ய நேரம் உள்ளது என்று உறுதி செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக "எனக்கு நேரம் இல்லை", என்று சொல்ல வேண்டாம், தியானத்தை தொடர்ந்து செய்வதால் அது உங்கள் வேலையை சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய உதவுகிது. எனவே 15 நிமிடங்கள் அதற்காக ஒதுக்குவதால் அவற்றின் பலங்களை ஒப்பிடும்போது அது ஒன்றும் பெரிது இல்லை.

அமைதியான காலை தியானம்

நீங்கள் காலையில் எழுந்து 10 முதல் 15 நிமிடங்கள் வறை தியானம் செய்வதால், எண்ணங்களற்ற நிலைக்கு எளிதாக செல்வதுடன் அதிர்வுகளை உணரவும் முடிகிறது.

இடம் மற்றும் தியானம் நிலைப்பாடு

ஒரு அமைதியான, வசதியான இடத்தை கண்டுபிடித்து, ஒரு மிகவும் தளர்வான நிலையில் உட்காரவும்.

எண்ணங்களுடன் போராடாதீர்கள்

நீங்கள் தியானம் செய்ய அமர்ந்தவுடன், நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்று விழிப்புடன் இருங்கள். உங்கள் தலை மேல் (லிம்பிக் பகுதி) தங்கள் துல்லியமான கவனத்தை செலுத்தியவுடன், முழு அமைதியை நீங்களே உணரலாம். இப்போது நேரம் ஸ்தம்பிக்கட்டும், நேரத்தில் இடைவெளியில் எண்ணங்கள் எழவும் விழவும் உதவுங்கள், அதனால் உங்கள்  சிந்தனை தடைபெறுகிறது, ஆனால், எண்ணங்களற்று விழிப்புணர்வு ஏற்படுகிறது. "நான் இந்த எண்ணத்தை மன்னிக்கிறேன், நான் மன்னிக்கிறேன், நான் மன்னிக்கிறேன்" என்று சொல்ல முயற்சிக்கவும்.

பொருட்கள் மீது கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டாம்

தியானம் என்பது கவனமோ, காட்சிப்படுத்தலோ அல்லது உங்கள் எண்ணங்களை நிறுத்த முயற்சிப்பது பற்றி அல்ல. அது, தன் போக்கில் விட்டு உள் அமைதியிடன் சரணடைவதாகும். உங்கள் வேலையை குண்டலினி செய்ய விடுங்கள்.

உங்கள் குண்டலினியுடன் தொடர்புகொள்ள கற்றுக் கொள்ளுங்கலள்

தியானத்தில், உங்களுக்கு சொந்தமான குண்டலினியுடன் பேசுங்கள், பணிவாக உள் எழுச்சி பெற வேண்டியும், உங்களுடன் இணைத்து, மற்றும் எண்ணங்களற்ற விழிப்புணர்வு ஏற்பட கோரவும். குண்டலினி எழும்பும் போது அதன் சுய நிலை நீங்கள் அறிவீற்கள், உங்கள் விரல் நுனிகளில் சக்கரங்களின் பிரதிபலிப்புகளை உணற ஆரம்பிப்பீர்கள். உங்கள் உள்ளங்கையில் குளிர்ந்த காற்றை உணர்வீற்கள்.

கூட்டு தியானம் செய்யுங்கள்

மற்ற பயிற்சியாளர்களுடன் சேர்ந்து செய்தால், உங்கள் குண்டலினி மிகவும் திறம்பட வேலை செய்ய முடியும். மற்றவர்களுடன் கூட்டு தியானம் செய்தால் நீங்கள் வேகமான முன்னேற்றம் காண முடியும், அதனால் உங்கள் வீட்டில் மற்றவர்களுடன் தியானம் செய்ய முயற்ச்சித்துப் பாருங்கள்.

Thursday, October 25, 2012

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்




அனைவரும் வாழ்வில் வெற்றிபெற பலவகையில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் வெற்றிப்பெற தியானம் நமக்கு பெரிதும் துணைப் புரிகின்றது. தியானம் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

எப்படி தியானம் செய்வது?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனமாக இருந்தால் நாம் செய்யும் தியானமானது நிச்சயம் எளிதில் கைகூடும். இதிலும் நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

01.தியானம் செய்ய நமக்கு தேவையானது உடலிலும், உள்ளத்திலும் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும்.

02.தியானமானது எளிதில் கிடைக்ககூடிய விஷயமில்லை எனவே பொறுமை மிகவும் அவசியம், அதனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது.

03.தியானத்தை ஒருபோதும் சோம்பலின் காரணமாக கைவிடுதல் கூடாது. விடாமுயற்சியுடன் தொடரவேண்டும். நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும்,உடல் நலமாக இருக்கும் போதும்,உடல் நலமில்லாத போதும் தியானத்தை மட்டும் தவறவிடக்கூடாது.

04.நாம் தியானம் செய்ய மிகச் சிறந்த காலம், பகலும், இரவும் ஒன்றுகூடும் அந்திவேளை. இந்த வேளையில்தான் நமது உடலின் அலைகள் அமைதியாகவும் ஆழமாகவும் இருக்கும். எனவே இவ்வேளையில் தியானம் செய்வது முழுமையாக நமக்கு உதவும்.

05.தியானம் செய்ய ஒரு பாய் மற்றும் சுத்தமான ஒரு துணி ஆகியவற்றை சுத்தமான தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டும். நிமிர்ந்து முதுகினை சாய்க்காமல் மற்றும் எதன் மீதும் சாயாமல் தியானிப்பது சிறந்தது.

06.தியானம் செய்யும் போது தலையும், தோள்களும், இடுப்பும் நேர்க் கோட்டில் இருக்குமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும்.அதே சமயம் முதுகெலும்பைத் தளர்ந்த நிலையிலே வைத்திருக்க வேண்டும். எந்த பொழுதும் முதுகெலும்பின் மீது தேவையில்லாத பாரத்தினையும், அழுத்தத்தினையும் தரக்கூடாது.

07.நம்மை நாம் முழுமையாக உணர்தல் வேண்டும்.நமது கால் விரல்களில் இருந்து தொடங்கி,உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் முழுமையாக உள்ளதாக நினையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் முழுமையானதாகவும்,எந்த குறையும் இல்லாததாகவும் நினைத்து தலை பகுதி வரை மேலேற வேண்டும். பின்பு முழு உடலும் முழுமையாக உள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

08. இவ்வாறு செய்து முடித்த பிறகு இரு நாசிகள் (மூக்கின் துவாரம்) வழியாக மூச்சை நீளமாக உள்ளிழுத்து பின் அதை வெளியே விடவேண்டும். மூச்சு வெளியேறியவுடன் உடல்தாங்கும் வரை மூச்சை உள்ளிழுக்காமல் வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு நான்கு முறை மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

09.இதன் பின் மனதுக்கு அமைதி தரும் பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த 'மகா உலகத்தை படைத்த பரம்பொருளின் மகிமையினை எண்ணிக்கொண்டு அந்த பரம்பொருள் என்னை ஒளிரச் செய்வார்' என பலமுறை கூறியப்படியே பதினைந்து நிமிடங்கள் தியானிக்கவேண்டும்.

10. நமது மனதினை நம்முன் விரிந்து கிடக்கும் அமைதியான ஒரு நீர்ப் பரப்பாகவும், வந்துபோகும் எண்ணங்கள் அதில் தோன்றும் நீர்க்குமிழியாகவும் கற்பனை செய்துக்கொள்ளவேண்டும். எப்பொழுதும் எண்ணங்களை அடக்கிக்கொள்ள கூடாது. அவை தானாகவே எழும்பி அடங்கக்கூடியது. 


இறுதியாக 'நான் மனம் அல்ல, நான் சிந்திப்பதை நானே உணர்கிறேன். என்மனம் செயல்படுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்ற உயர்ந்த கருத்தினை நாம் பற்றிக்கொண்டால் இறுதியில் மனம்வேறு, நாம் வேறு என்பதை உணரமுடியும்.

இந்த நிலையினை நாம் அடைந்துவிட்டால், மனமானது நம்முடைய வசம் வந்துவிடும். இந்த நிலையினை நாம் எட்டிவிட்டால் நாம் விரும்பும் எதனையும் நம் வசமாக்கிகொள்ளலாம்.

இதன் மூலம் நாம் விரும்பும் அனைத்தையும் வெற்றிக் கொள்ளலாம். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நல்ல சிந்தனையையும் இந்த உலகிற்கு தரமுடியும்.

அனைவரும் தியானத்தை சிறுபொழுது என்றாலும் விடாமல் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுகின்றேன்.


 

தியானம் செய்ய உகந்த நேரம் எது?



எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.

சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.

மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.

பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.

தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.

தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.

பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.

சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.

யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.

தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.

இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!

தியானம்



உடலினை உறுதிசெய்

ஆழ்ந்த தியானத்தில் மனது

ஒழுகும் எண்ணெயைப் போல

தொடர்ந்து ஒருநிலையில் இருக்கும்.

-பதஞ்சலி முனிவர்

உடல்நலமா, மனநலமா, சமூக நலமா என்று கேட்டால் , சிலர், எதுவும் வேண்டாம் மனநிம்மதிதான் வேண்டும் என்கிறார்கள். எந்த இன்பமும் வேண்டாம் .மனஅமைதிதான் வேண்டும் என்பதுதான் இவர்களது வேண்டுகோள். PEACE OF MIND. நிம்மதி என்பது சுகத்தை அனுபவிக்கும் ஒரு நிலை அல்ல. துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கும் ஒரு நிலை. துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்தா லொழிய நிம்மதி அடைய முடியாது.

வாழ்வில் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கும் நபர்கள் மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. கடன்பட்டவர்கள், குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் , படித்தும் வேலை கிடைக்காதவர் கள், படிக்காமல் ஊர் சுற்றித் திரியும் இளைஞர் கள், நிரந்தர நோயாளிகள், தினமும் சண்டை யிடும் பெற்றோரின் குழந்தைகள், இப்படி வாழ்வில் நிம்மதி இழந்தவர்கள் பலரையும் பார்க் கிறோம். நாமும் கூட வாழ்வில் அதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில சம்பவங்கள் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன. பலர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றனர். சிலர் அப்படி மீளமுடியாமல் நீண்ட காலம் நிம்மதி இழந்து குடிப்பழக்கத் திற்கும் அடிமையாகிறார்கள். பின்னர் அதன் மூலம் உடல்நலமும், மனநலமும் கெட்டு வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

நிம்மதியும் மன அமைதியும் உள்ளவர்கள் தான் ஊட்டச்சத்து உணவு உண்டு உடல்நலம் பேண முடியும். அவர்களால்தான் நல்ல எண்ணங் களும், நல்ல நடத்தையும் உள்ளவர்களாக இருக்க முடியும். நிம்மதி இழந்தவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில் தெரியும். முகத்தின் தோற்றம் அவரது வயதை அதிகரித்துக் காட்டும். உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடியாது. சொல்லும், செயலும் இவர் தோல்வியடைந்தவர் என்பதைக் காட்டிவிடும்.

கவலைகளை விட்டொழியுங்கள்

மன நிம்மதி இழந்தவர்கள் கவலைப்படு வார்கள். தங்களது தோல்விக்குத் தன்னையும், மற்றவர்களையும் குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள். முற்காலங்களில் செய்யத் தவறிய காரியங்களை அல்லது செய்துவிட்ட காரியங் களைப் பற்றியே வருந்திக் கொண்டிருப்பார்கள். கவலைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் கவலைப்படுவதால் என்ன பயன் என்பதாகும். நாம் ஒரு பிரச்சனையைச் சாமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவேளை அந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாது என்றால் அப்பிரச்சனையைக் குறித்த கவலைப்பட்டு என்ன பயன்? ஆக பிரச்சனையை சாமளிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் கவலை என்பது தேவையற்ற ஒன்று. அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.

அதற்காக ஒரு பிரச்சினை என்று வந்த வுடன், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்து விட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. பிரச்சனை என்றதும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று இந்தப் பிரச்சினையால் அதிகபட்சம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பாதிப்பை சந்திக்க மனதளவில் தயாராக வேண்டும் பெரும்பாலும் அப்படி ஒரு பாதிப்பு வராமல் கூட போய் விடும் இரண்டாவது , அதனைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. ஓய்வு பெறும் தருவாயில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு அல்லல்படுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒருவன் 58 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும் என்றிருந் தால், 57 வயதில் கவலைப்பட்டு என்ன பயன்? பணி ஓய்வு வந்தே தீரும். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஏதாவது அவசர வேலையாக வெளியே கிளம்புகிறோம், அப்போது மழை வருகிறது அதைத் தடுத்து நிறுத்திவிட்டு செல்லலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஏனென்றால் மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே மழை பெய்யட்டும் , பெய்து முடியட்டும் என்று காத்திருந்து பிறகு கிளம்புகிறோம். நம்மை மீறி வருவதை ஏற்றுக் கொள்வோம். Accept the inevitable

எப்போதுமே மன அமைதியைப் பரா மரிக்க மிகச் சிறந்த வழி தியானமாகும். இதன் முக்கியத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்துத் துறவிகளும், புத்தமதத் துறவிகளும் நன்கு புரிந்துள்ளனர். திருவள்ளுவர் தவம் என்னும் தலைப்பில் தனி அதிகாரத்தைப் படைத்துள்ளார். இந்தியாவில் புத்த மதம் தோன்றியிருந்தாலும், ஜப்பானில் தான் தியானத்திற்கு என்று அரசர்கள் கோயில்களைக் கட்டியுள்ளனர். இத்தகு சென் கோயில்கள் (Zen Temples) என்று பெயர். இந்தத் தியானக் கோவில்கள் ஜப்பானில் ஏராளமாக உள்ளன. நல்ல சிந்தனை, நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, மற்றும் நல்ல தியானம் ஆகிய எட்டுவழிப் பாதையைப் போதித்தார் புத்தர். இந்து மதத்தில் சாமி கும்பிடுவதும், தவம் செய்வதும் தியானங் களே. நவீன காலத்தில் பலர் கடமைக்காக வேக வேகமாக கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து அவரச அவசரமாக வீட்டிற்கு வந்திருந் தாலும், சாமி தரிசனத்தின் நோக்கம் தியானம் தான். சிலர் தியானத்தின் அருமையை உணர்ந்து கோயில்களில் இருக்கும் 15 நிமிடங்களும் முழு நேரமும் கடவுள் நினைப்பாக இருப்பார்கள். இதுவே தியானம். கிறிஸ்தவ மனத்தினர் கூட ஜெபம் செய்கிறார்கள். 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்யப்படும் ஜெபத்தை கேட்பவர்கள் அந்தப் பேச்சையே கேட்டு மனதை ஒருநிலைப் படுத்துவார்கள். மனதை வேறெங்கும் அலையவிடுவதில்லை. இதுவே தியானமாகும். இஸ்லாமியர்களும் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முழங்காலிட்டு தலையைத் தரையில் தொட்டுச் செய்யும் தொழுகையுடன் சொல்லும் மந்திரம் ஒரு நல்ல தியானம் ஆகும். தியானம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக தியானத்தால் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் அதிகரிக்கின்றது. முழுக்கவனத்தையும் ஒரே பொருளில் அல்லது ஓசையில் செலுத்துவதால் ஒருநிலைப்படுத்தும் சக்தி (Concentration Power)அதிக மாகிறது. மாணவர்களுக்குப் பாடங்களை மனதில் பதிய வைக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது.

இரண்டாவது தியானத்தால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. எனவேதான், காரத்தே வீரர் களும், செஸ் விளையாட்டு வீரர்களும் தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மூன்றாவது, தியானத்தால் நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. முதலியே சொன்னது போல உணவை முழுக்கவனத்துடன் சாப்பிட்டால், இதுவரை எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து அத்துடன் முடித்துக் கொள்ள முடிகிறது.

நான்காவது, தியானம் செய்யும் போது நாம் அமைதியாக இருப்பதால், நமது மனதினுள் இருக்கும் இன்பத்தையும், சமாதானத்தையும், தேவையையும் உணரமுடிகிறது.

ஐந்தாவது, தியானம் நாம் யார் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்தும். நாம் நம் மீது கவனம் செலுத்தி நம்மைப் பற்றிச் சிந்திக்காத வரையில் நம்முடைய திறமைகளைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும் போதும் நாம் நம்மோடு பேசும் போதும், நாம் யார்? நமது திறமைகள் என்ன? நமது சாதனைகள் என்ன? தோல்விகள் என்ன? என்ற யதார்த்தம் நமக்குப் புலப்படும். நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொண்ட அறிவுதான் மற்ற எல்லா அறிவையும் விட சிறந்ததுSelf Knowledge is the best Knowledge
“உன்னை நீ அறிவாய்” (Know Thyself) என்றார் கிரேக்க அறிஞர் சாக்கரட்டீஸ். நம்மைப் பற்றிய அறிவை உணர்த்த தியானம் வழி வகுக்கிறது.

ஆறாவது தியானம் நம்மை நிகழ்காலத் தில் வைத்திருக்கும். இறந்த காலத்தைப் பற்றி நினைப்பதில் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலத்தில் வாழ்வது என்பது ஒரு பகல்கனவு. நிகழ்காலத்தில் வாழ்ந்தால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வெற்றிகரமாக வாழ முடியும். அப்படி நிகழ்காலத்தில் வெற்றிநடை போடுபவர்களுக்கு இறந்த காலமும் வெற்றிச் சரித்திரமாக இருக்கும். எதிர்காலமும் ஒளி மயமாக இருக்கும்.

எப்படித் தியானம் செய்வது?

தியானம் செய்ய பல முறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பொருத்தமாக இருக்கும். ஒரு அமைதியான இடத்தில் முழங் கால்களை மடித்து பாதங்கள் மேல் அமர வேண்டும். இதை வஜ்ராசனம் என்பார். நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, முதுகை நேராக வைத்து, கண்களை 90 டிகிரி நேராக முன்னால் பார்க்க வேண்டும். பின்னர், கண்களை மூடிக் கொண்டு ஒரே வார்த்தையையே திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும்.

இந்து என்றால் ‘ஓம்’

முஸ்ஸீம் என்றால் ‘அல்லா’

கிறிஸ்தவர் என்றால் ‘இயேசுவே’

ஆனால், அந்த 5 நிமிடங்களும் மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடுத்திய உடை, சென்ற வாரம் பார்த்த சினிமா, எப்போதோ கேட்ட பாட்டு, எதிரிகளின் செயல்பாடுகள் போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனதை அப்படி அலைய விடாமல், நாம் சொல்லும் மந்திரத்தை மட்டும் காதில் வாங்கி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்களது கவனத்தை உங்கள் உடம்பில் பாய்ச்சுங்கள். உங்களது கவனம் முழுவதும் உங்களது காலின் பாதத்தில் கொண்டு வாருங்கள். உங்களது பாதங்கள் எப்படி இருக் கின்றன? நல்ல ஆராக்கியத்துடன் இருக்கின் றனவா? இப்போது உங்கள் கவனம் உங்களது முழங்காலில் வரட்டும். நன்றாக முழங்காலைப் பற்றிச் சிந்தியுங்கள், இப்போது உங்கள் கவனம் முட்டியில், இப்போது இடுப்புப் பகுதி. பின்னர் தோள் பகுதி.

இப்போது உங்களது முழுக்கவனமும் கழுத்துப் பகுதியில். கழுத்து நலமாக உள்ளதா? நலமாக இருக்கிறது. இப்போது உங்கள் கவனம் தலைக்கு வரட்டும். தலைப்பகுதி தெளிவாக உள்ளதா? ஆராக்கியமாக உள்ளதா ஆம்!

இப்போது உங்கள் சுவாசம் மீது கவனத்தைச் செலுத்துங்கள். நான் மெதுவாக சுவாசிக்கிறேனா? அல்லது வேகமாக, ஆழமாக சுவாசிக்கிறேனா?. மெதுவாக மூச்சை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுங்கள். நான்கு வினாடிகள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூச்சை மெதுவாக விடுங்கள். ஆனால், கவனம் சுவாசத்தில் மட்டும் இருக்க வேண்டும். மீண்டும் உங்களது முழுக் கவனமும் சுவாசத்தில் கொண்டு வாருங்கள், மூச்சை இழுங்கள். நான்கு வினாடிகள் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள் மனதில் மற்ற எண்ணங்களை நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள், மீண்டும் அதே வார்த்தைகள்,

ஓம் ஓம் ஓம்

அல்லா அல்லா அல்லா

இயேசுவே இயேசுவே இயேசுவே

இப்படி ஒவ்வொரு நாளும் 15 நிமிட நேரம் தியானத்தில் ஈடுபட்டால் போதும். தினமும் தியானம் செய்ய முடியவில்லை என்றால், வாரம் 3 நாட்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் செய்வதை விட வழக்கமாக செய்வது முக்கியமானதாகும்.

உடற்பயிற்சியோடு தியானம்

தினமும் முறையாக ஓர் இடத்தில் இருந்து கொண்டு தியானம் செய்வது சிறந்தது என்றாலும், தியானம் வேறு பல விதங்களிலும் செய்ய முடியும். நான் தினமும் காலையில் ஓடும்போது எனது வலது காலை நிலத்தில் பதிக்கும் போது 0, 1, 2, 3 என்று 100 வரை எண்ணி, பின்னர் 99, 98, 97 என்று கீழ்நோக்கி 0 வரை எண்ணுவேன். அடுத்தது இடது கால். இப்படியாக நான் தொடர்ந்து 10 நிமிடங்கள் வேறு எந்த எண்ணமும் மனதில் வராதபடி முழுக் கவனத்தையும் ஓடுவதிலும், எண்ணுவதிலும் ஈடுபடுத்துவேன். இதுவும் ஒருவகை தியானம் ஆகும். இதனை நீங்களும் பின்பற்றலாம்.

நான் எடைப்பயிற்சி (GYM) செய்யும் போது எனது முழுக்கவனத்தையும் எனது உடல் மீது செலுத்துவேன். பழுவினைத் தூக்கும் ஒவ்ù வாரு அசைவையும் எண்ணிக் கொண்டிருப்பேன். வேறு எங்கும் சிந்தனை போகாமல் கட்டுப் படுத்துவேன். இதுவும் ஒரு தியானம்தான்.

ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். என்னதான் கட்டுப்படுத்தினாலும், ஒரிரு நிமிடங் களுக்குப் பிறகு மனது வேறு சிந்தனைக்குச் சென்றுவிடுகிறது. இது இயற்கைதான். ஓடும் போது கூட ஐந்து நிமிடங்கள் உடலின் மீது இருந்த கவனம், வேறு எங்கோ செல்கிறது. அப்போது கூட சிந்தனைகளை ஆக்கப்பூர்வ மான காரியங்களில் ஈடுபடுத்தலாம். அடுத்த சில நாட்கள் செய்யவேண்டிய காரியங்களைக் கூட ஓடும்போது அல்லது நடக்கும்போது சிந்திக் கலாம். முடிவெடுக்காமல் நிலுவையிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு முடிவுகள் எடுக்கலாம். ஒரு பொருளைக் குறித்து ஆழ சிந்தித்து மனதிற்குள் விவாதம் நடத்தி நல்ல ஒரு முடிவு எடுப்பதும் ஒரு தியானம்தானே. மிக உன்னத மான பல சிந்தனைகள் உதயமானது காலையில் நடக்கும் போதுதான் என்கிறார் பெடரிக் நிவாட்சி என்ற அறிஞர்.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே உடற் பயிற்சி செய்கிறார்கள். ஒரு பாட்டைக் கேட்கும் ஐந்து நிமிடங்களும் முழுக்கவனத்தையும் அப் பாட்டிலேயே வைத்திருக்கலாம். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி பாட்டைக் கேட்பதும் ஒரு வகை தியானமே!

தியானம் ஏன் செய்ய வேண்டும்?


பதஞ்சலி மகரிஷி மனதிற்கு ஒரு திறமை இருக்கிறது என்று கூறுகிறார். அந்த திறமையை சரியான பாதையில் பயன்படுத்தும் பொழுது நமக்கு எது தெரிகிறதோ அதுவே நிஜம். அந்த திறமையை பயன்படுத்த தெரியாத பொழுது நமக்கு எது தெரிகிறதோ அது தவறு.

ஒரு நூலுக்கு இரண்டு நுனிகள் உள்ளன. ஒன்று 'பிரமாணம்', மற்றொன்று 'விபர்யை'. முதல் நுனி பிரமாணத்தில் இருந்து அறிவு கூர்மையால் செயல்படும்போது வெளிப்படும் வாஸ்தவ ஞானம், நிஜமாகிறது. அப்பொழுது நாம் செய்யும் அனைத்துமே சரியானதாக இருக்கும். எந்தத் துறையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது சரியாக இருக்கும். நாம் எந்த முடிவெடுத்தாலும் அது சரியான முடிவாக இருக்கும்.

'விபர்யை' நுனியில் நாம் வேலை செய்யும் பொழுது, அது தவறாகவே இருக்கும். எந்த துறையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது தவறாகவே அமையும். அப்பொழுது நாம் எந்த முடிவெடுத்தாலும் அது தவறாகவே இருக்கும். ஏனென்றால் அந்த முடிவை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. அங்கு அந்த 'விபர்யை' நுனி அவ்வாறு செய்கிறது.

சிலர் தம்மை 'துரதிஷ்டசாலி' என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது. அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் பலன் கிடைப்பதில்லை. அந்த 'விபர்யை' நுனியில் இருந்து மாறவேண்டும். அவர்களுடைய மனம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அவர்களுடைய மனமானது நாம் சரியாகத்தான் செய்ல்படுகிறோம் என்று நினைக்கின்றது. ஆனால் அது தவறாகத்தான் போய் முடிகிறது.



பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுவது போல், நாம் செயல்படும் பொழுது நம்
மனம் சரியான திசையில் செயல்படும். வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற இயலும் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிக்ள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் அவரவர் வாழ்க்கையில், எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அந்த துறையில் அவர்கள் திறமையுடன் உயர்ந்து புகழ் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்திற்கும், நாட்டிர்கும் நல்ல பெயர் தேடிக் கொடுப்பார்கள். பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கூறிய ஒன்பது வழிகள்



1. சரியான உணவு:

சாத்வீகமான சைவ உணவை உண்ண வேண்டும். தமோ குணத்தை ஊக்கும்விக்கும் உணவையும் பாவத்தைத் தேடித் தரும் அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சுத்த சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். இதுவே சரியான உணவு.



2. மிதமான உணவு:

பசி எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் உணவு உட்கொள்ள வேண்டும். ருசியாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ளக் கூடாது. இதனால் விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்படும்.



3. நிராஹாரம்:

'லங்கனம் பரமஒளஷதம்' என்று கூறுவார்கள். ஆகையால், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை நிராஹாரத்தை மேற்கொள்ள வேண்டும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.



4. சரியான வாக்கு:

நாம் பேசும் வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தையானது நமக்கும், சமுதாயத்திற்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை கைவிட வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது. யாருக்கும் தீங்கு விளைவிக்ககூடாது.



5. மிதமான வாக்கு:

அளவோடு பேச வேண்டும். அதிகம் பேசினால் பொய், மற்றும் தவறுகள் வெளிவரும். இதனால் நமக்கு நன்மை கிடையாது.



6. மெளனம்:

மெளனத்தால் நாம் சக்தியை பெறுகிறோம். காந்தியடிகள் மெளனத்தைக் கடைப்பிடித்தார். மெஹர் பாபா, ரமண மகரிஷி தங்கள் வாழ்க்கை முழுவதும் மெளனத்தைக் கடைப் பிடித்தார்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் மெளனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.



7. சரியான சிந்தனை:

நம் சிந்தனைகள் சுயநலம் இல்லாமல் பொதுநலமாக இருக்க வேண்டும். நம் சிந்தனைகள் சமுதாயத்திற்காகவோ இல்லை நமக்காகவோ பயன்பட வேண்டும்.



8.மிதமான சிந்தனைகள்:

நாம் தேவையானவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும். தேவையற்றவைகளைப் பற்றி சிந்திக்கும் பொழுது சக்தியையும் மன அமைதியையும் இழக்கிறோம். உடல் நலம் குன்றி போகும். ஆகையால் குறைந்த அளவே சிந்திக்க வேண்டும்.



9. சிந்தனையற்றநிலை (தியானம்):

"நிர்விஷயம் மனஹா - தியானம்" என்றார் பதஞ்சலி. மனதை சிந்தனையற்ற நிலையில் வைத்துக் கொள்வதே தியானம். இது பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கூறிய 'சுவாசத்தின் மேல் கவனம்' தியான முறையால் கைகூடும்.

இந்த தியானம் செய்வதால் மேற்படி சொன்ன எட்டு விஷயங்களையும் கடைபிடிக்க முடியும். ஆகையால் எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ அவ்வளவு லாபங்கள் பெறலாம்.

இயல்பாக உபவாசத்தால் 0.17%ம் மற்றும் மெளனத்தில் 0.9%ம் லாபம் கிடைக்கும். ஆனால் தியானத்தால் 99% லாபம் கிடைக்கிறது. இந்த தியானத்தின் மூலம் மனதிற்கு தெளிவு, (நிம்மதி) கிடைக்கிறது. தியானத்தின் மூலம் மற்றும் பல லாபமும் பெறமுடியும். அதுமட்டுமின்றி நம் மனதை "பிரமாண" நுனியில் வைத்துக் கொள்ளவும் முடியும். நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்களைக் காணலாம். நாம் விரும்பியதை அடையலாம். வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக் கொள்ளலாம். நாம் மட்டுமின்றி, குடும்பத்தையும் நாம் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளலாம். ஆகையால், தியானத்தை 'திவ்ய ஒளடதம்' என்று கூறினார்கள்.

தியானத்தால் நம் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். இதை நாம் கடைபிடிக்கும்போது பயம் நீங்கி விடும். நம் மனமும், உடலும், நிலையாக இருக்கும். அப்பொழுது அந்த 'பிரமாண' நுனி செயல்படத் துவங்கும். அப்பொழுது ("பிரமாண" நுனி மூலம்) எதை நாம் அறிந்து கொள்கிறோமோ அதுவே நிஜம். அதுவே உண்மை. "பிரமாண நுனி" செயல்படும் பொழுது மனதிற்கு ஒரு வடிவம் கிடைத்தால் நாம் ரிஷியாவோம். கடவுள் ஆவோம்.