Pages

sai yoga centre

sai yoga centre

Sunday, November 6, 2011

ஆல்ஃபா தியானம் என்றால் என்ன?

சக்திகளிலேயே மிகப்பெரிய சக்தி நம் ஆழ் மனதின் சக்தி. இதை உணர்ந்து நமக்குள்ளேயே இருக்கும் இந்த சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் நிச்சயமாக நம் வாழ்வில் சிறந்த மாற்றங்கள ஏற்படுத்திக் கொள்ள முடியும். பல விஷயங்களைச் சாதிக்கவும் முடியும்.

இந்த அழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கறதா? இருக்கிறது. உஙகள் மனதின் ஆல்ஃபா நிலை தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தியை வெளிப்படுத்தும். ஒவ்வொரு மனிதரும் இதை உணர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் வளர்ப்பது அவசியமாகும்.இதன் மூலம் மனிதனின் சக்தியும் அதிகரிக்கும்.

ஆல்ஃபா எனப்படுவது வினாடிக்கு 7 முதல்14 சைக்கிள்கள் வரையிலான நிலையாகும். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலையாகும்.இந்த நிலையில் செயல்படும்பொழுது பொதுவாக அதிகமாக இயங்கும் இடது பக்க மூளையுடன், வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப் படுகிறது. அதனால் நமது மூளை மிகவும் சக்திவாய்ந்த, ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் ஈடுபடுகிறது.இந்த நிலையில் உங்கள் ஆழ்மனது டன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அங்கு தூங்கி இருக்கும் மிகப்பெரிய சக்தியைத் தட்டி எழுப்பி நீங்கள் பயன் பெற முடியும்.

இந்த நிலையில் இருக்கும் பொழுது மனதில் பதிக்கப்படட எண்ணங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் ஈடேறும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆல்ஃபா தியானத்தைப் பயிற்சி செய்தாலே நினைவாற்றல் கூடுவதுடன் புத்திக் கூர்மையும் உண்டாகிறது.
உங்கள் எண்ணங்களின் சக்தியை உணருங்கள்

2 comments:

  1. தியானம்
    தன் மன காட்டுக்குள்ளே
    தன்னை தானே தெடுவது

    ReplyDelete